சண்டைக் கோழிக்காக சென்னையில் உருவாகும் மதுரை!

நடிகர் விஷாலின் 25ஆவது திரைப்படமான சண்டைக்கோழி திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கென, சென்னையில் அழகிய மதுரையை உருவாக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுமார் ஆறு கோடி ரூபா செலவில் மதுரை போன்ற பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறித்த பிரமாண்ட செட்டானது 10 ஏக்கர் நிலப்பரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் வளாகம், பிரமாண்ட கட்டடங்கள் என்பவற்றை உள்ளடக்கியதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.

லிங்குசாமி இயக்கத்தில், விஷால் பிலிம் ஃபெக்டரி தயாரிப்பில் விஷால் ‘சண்டைகோழி-2′ திரைப்படம் உருவாகவுள்ளது. இந்தப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். நடிகர் ராஜ்கிரன், சதீஷ் ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றவுள்ளனர்.

You might also like