யார் இந்த சூட்கேசுக்கு சொந்தக்காரர்?

ஸ்கொட்லன்ட் அருங்காட்சியகத்தில் அநாதரவாக கிடந்த சூட்கேசில் கட்டுக்கட்டாக பண நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணி இதைத் தவற விட்டிருக்கலாம் என்று ஸ்கொட்லாந்து பொலிசார் நம்புகிறார்கள் .

ஸ்கொட்லன்டடின் லனர்க்சயர் என்னும் இடத்திலுள்ள சிறிய அருங்காட்சியகம் ஒன்றிலேயே இந்த சூட்கேஸ் கிடந்துள்ளது.

“இந்தப் பணத்தின் சொந்தக்காரர் யார் என்பது எமக்கு திடமாகத் தெரியும். எனவே வேறு யாரும் இந்தப் பணத்துக்கு சொந்தம் கொண்டாட வந்து மூக்குடைபடவேண்டாம்” என்று பொலிசார் எச்சரித்துள்ளனர் .

பொலிசார் சம்பந்தப்பட்டவருடன் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது . இது கடத்தல் தொடர்புடைய பணமாகவும் இருக்கலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

You might also like