கராத்தே தொடர்களில் தெற்கு ஆசி­யா­வில் 3 தங்கம் வென்று பாலு­ராஜ் ஆதிக்­கம்

கராத்தே தொடர்­க­ளில் தெற்­கா­சிய மட்­டத்­தில் இலங்­கைத் தமி­ழர் பாலு­ராஜ் ஆதிக்­கம் செலுத்தி வரு­கி­றார். தெற்­கா­சிய மட்­டத்­தில் இது­வரை மூன்று தட­வை­கள் தங்­கப் பதக்­கத்­தைச் சுவீ­க­ரித்­துள்­ளார்.

கிழக்­கி­லங்­கை­யின் கல்­முனை பிர­தேச செய­லா­ளர் பிரி­வி­லுள்ள சேனைக் குடி­யி­ருப்­புக் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர் பாலு­ராஜ். 2014ஆம் 2016ஆம் ஆண்­டு­க­ளில் புது­டில்­லி­யில் இடம்­பெற்ற கராத்தே தொட­ரில் தங்­கப் பதக்­கத்தை வென்­றி­ருந்­தார்.

இந்த மாதம் 05ஆம் திகதி கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் நடை­பெற்ற தெற்­கா­சிய கராத்தே தொட­ரில் தங்­கப் பதக்­கம் வென்­ற­தன் மூலம் தெற்­கா­சிய மட்­டத்­தில் ஒட்­டு­மொத்­த­மாக மூன்று தங்­கப் பதக்­கங்­களை அள்­ளி­யுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு அரங்­கில் கடந்த வரு­டம் நடை­பெற்ற தேசிய மட்­டத் தட­க­ளத் தொட­ரில் பாலு­ராஜ் சிறந்த பெறு­பேற்றை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

‘‘எனது வெற்­றிக்­குக் கார­ணம் எனது தாயாரே. நான் எங்கு சென்­றா­லும் அவ­ரும் என்­னுடன் கூடவே வரு­வார். கராத்­தே­யில் என்னை எனது தாயார் அதி­கம் ஊக்­கப்­ப­டுத்­து­கி­றார்’’ என உத­ய­னுக்கு அப்­போது வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யில் பாலு­ராஜ் தெரி­வித்­தி­ருந்­தார்.

You might also like