இலங்கை – இந்­தியா இறுதி டெஸ்ட் இன்று

இலங்கை -– இந்­திய அணி­க­ளுக்கு இடை­யி­ லான மூன்று ஆட்­டங்­க­ளைக் கொண்ட டெஸ்ட் தொட­ரின் மூன்­றா­வ­தும் இறு­தி­யா­ன­து­மான ஆட்­டம் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

இந்­திய அணி இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளது. முத­லிரு ஆட்­டங்­க­ளி­லும் பெரு வெற்­றி­பெற்று தொட­ரைக் கைப்­பற்­று­வதை உறுதி செய்­துள்­ளது இந்­தியா.

இந்த நிலை­யில் இறுதி டெஸ்ட் ஆட்­டம் பல்­லே­கல மைதா­னத்­தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இந்த ஆட்­டத்­தின் முடிவு எவ்­வாறு அமைந்­தா­லும் அதா­வது இலங்கை வெற்­றி­பெற்­றா­லும் கிண்­ணம் இந்­தி­யா­வி­டம் இருந்து எடுத்­துக் கொள்­ளப்­படமாட்­டாது.

கடந்த இரண்டு ஆட்­டங்­க­ளி­லும் இலங்கை அணி­யின் பந்­து­வீச்­சுப் பல­மாக இருந்த கேரத் இன்று கள­மி­றங்­க­மாட்­டார்.

இது இலங்­கைக்­குப் பின்­ன­டைவு. இந்­திய அணி­யின் சக­ல­துறை வீர­ரான ஜடே­யா­வுக்கு இன்­றைய ஆட்­டத்­தில் கள­மி­றங்­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அவ­ரது இடத்­துக்கு குல்­தீப் யாதவ், அச்­கர் பட்­டேல் இரு­வ­ரில் எவர் கள­மி­றங்­கு­வது என்ற போட்டி ஏற்­பட்­டுள்­ளது.

You might also like