வள்ளுர்பண்ணைப் பாலக் கட்டுமானங்கள் ஆரம்பம்

கிளிநொச்சி – ஊற்றுப்புலம் வள்ளுர்பண்ணைக்கான பாலத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த பாலத்தின் கட்டுமானப்பணிகள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட போதும், பருவமழையால் புது முறிப்புக்குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து காணப்பட்டதால் பாலத்தை அமைக்கமுடியாத சூழ்நிலை காணப்பட்டுள்ளது.

தற்போது குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் இதன் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

You might also like