கொழுப்பை குறைக்கும் எள் துவையல்

தேவையான பொருள்கள் :
கறுப்பு எள் – அரை கப்
பூண்டு – 2 பல்
காய்ந்த மிளகாய் – 5
தேங்காய் துருவல் – 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – தேவையான அளவு
புளி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
வெறும் சட்டியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும்.
மற்ற பொருள்களையும் (உப்பு தவிர) ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுத்து கொள்ளவும்.
வறுத்த பொருள்கள் ஆற வைத்து எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
சத்தான எள் துவையல் தயாா்.

You might also like