Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

வடகொரியாவுக்கு எதிராக ஏவுகணைத் தடுப்பு டோக்கியோவில்

அமெரிக்­கா­வின் குவாம் தீவையோ அல்­லது ஜப்­பா­னையோ தாக்­கும் வகை­யில் வட­கொ­ரி­யா­வின் ஏவு­க­ணை­கள் சென்­றால் அவை டோக்­கி­யோவை அடை­யும் முன்­னர் வான் பரப்­பில் வைத்து அழிக்­கும் விதத்­தில் ஏவு­க­ணைத் தடுப்பு அமைப்பை மத்­திய டோக்­கி­யோ­வில் நிறுத்­தி­யுள்­ளது ஜப்­பான்.

இந்­தத் தக­வலை பன்­னாட்டு ஊட­க­மான டெய்லி மெய்ல் வெளிப்­ப­டுத்­தி­யது. குவாம் தீவை நான்கு ஏவு­க­ணை­கள் மூலம் தகர்க்­கப்­போ­வ­தாக வட­கொ­ரியா விடுத்­துள்ள மிரட்­டல் உலக அரங்கை அதி­ர­வைத்­தள்­ளது. வட­கொ­ரி­யா­
வி­டம் அவ்­வாறு மேம்­பட்ட ரக ஏவு ­க­ணை­கள் உள்­ளமை தற்­போது தெரி­ய­வந்­துள்­ள­தால் தற்­காப்பு முயற்­சி­களை அமெ­ரிக்கா கன­கச்­சி­த­மா­கச் செய்து வரு­கி­றது. வட­கொ­ரி­யா­வுக்கு அயல்­நா­டான தென்­கொ­ரியா, அமெ­ரிக்­கா­வின் நட்பு நாடு.

எனவே ஏவு­க­ணை­க­ளைத் தாக்­கி­ய­ழிக்­கும் தாட்ட என்ற ஏவு­க­ணைத் தடுப்பை தென்­கொ­ரி­யா­வில் நிலை­
நி­றுத்­தி­யுள்­ளது அமெ­ரிக்கா. இதன்­மூ­லம் தென்­கொ­ரிய வான்­ப­ரப்­பில் வைத்து வட­கொ­ரி­யா­வின் ஏவு­க­ணை­களை அழித்­து­வி­ட­லாம் என்­பது அமெ­ரிக்­கா­வின் திட்­டம். இதே­போல் ஜப்­பா­னும் தனது தற்­காப்பு நட­வ­டிக்­கை­க­ளில் அதி­கம் கவ­னம் செலுத்­து­கி­றது.

வட­கொ­ரி­யா­வின் தெற்­குப் பக்­க­மாக ஏவப்­பட்டு தென்­கொ­ரி­யா­வில் இருந்து தப்­பி­வ­ரும் ஏவு­க­ணை­க­ளை­யும், கிழக்­குப் பக்­க­மாக தம்மை நோக்கி ஏவப்­ப­டும் ஏவு­க­ணை­க­ளை­யும் வானில் வைத்து தாக்கி அழிக்க மத்­திய டோக்­கி­யோ­வில் ஏவுகணைத் தடுப்புக்களை ஜப்பான் நிறுத்தியுள்ளது.

You might also like