மேசன் கற்கை முடித்தவர்களுக்கு உபகரணங்கள் வழங்கினார் சஜித்

தேசிய பயிலுநர் தொழிற்பயிற்சி அதிகார சபையின் மேசன் கற்கை நெறியை நிறைவு செய்தவர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருமறைக் கலா மன்றத்தில் நடைபெற்றது.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தொழில் உபகரணங்களை வழங்கினர்.

நிகழ்வில் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ். மாவட்டச் செயலர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா, வடக்கு ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு வந்தவர்கள் உடற்சோதனையின் பின்னர் நிகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அதேவேளை, இந்த நிகழ்வு வந்திருந்த ஊடகவியலாளர்கள் உட்பட அனைவரும் உடற்சோதனையின் பின்னரே நிகழ்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

You might also like