சீனாவின் வடக்கு பகுதியில் சூறாவளி

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மங்கோலியாவில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்துள்ளது.

பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றுக்கு ஐந்து பேர் பலியாகினர் என சீன ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் மூன்று கிராமங்களை தாக்கிய இந்த சூறாவளியால் சுமார் 30 வீடுகள் சேதமடைந்தன. இதன் காரணமாக 270 பேர் பாதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

You might also like