Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வாழவைக்கும் வாழை மரம்!

வாழை மரத்­தின் அடி முதல் நுனி வரை அனைத்­துமே எமது வாழ்­வி­ய­லோடு கலந்­தவை. அவற்­றின் ஒவ்­வொரு பாகங்­க­ளுமே மிக­மி­கச் சிறந்­தவை.

வீட்டு விழாக்­க­ளில் வாழைக்­கன்று மற்­றும் வாழைக்­கம்­பங்­களை நடு­வ­தில் தொடங்கி, விருந்து பரி­மாற வாழை­இலை­யைப் பயன்­ப­டுத்­து­வதுவரை அனைத்­துக்­குப் பின்­பும் மருத்­து­வக் கார­ ணங்­கள் உண்டு. இதனை அறிந்த எமது முன்­னோர்­கள், வாழை மரத்­தின் பயன்­களை முழு­தும் அனு­ப­வித்­த­னர். நோயற்று வாழ்ந்­த­னர்.

விருந்­தோம்­ப­லில்
வாழை­யிலை

வாழை­யி­லை­யில் சாப்­பி­டு­வ­தால் உட­லுக்­குப் பல நன்­மை­கள் ஏற்­ப­டுகின்றன. அது­மட்­டு­மல்ல, நாம் சாப்­பிட்டு முடித்­த­பின் வாழை­யிலை கால்­ந­டை­க­ளுக்கு உண­வா­கவோ, நிலத்­துக்கு உர­மா­கவோ மாறி­வி­டு­கி­றது. ஆகவே, வாழை­யி­லை­யில் சாப்­பி­டு­வதை நாம் வாடிக்­கை­யாக்­கிக்­கொள்ள வேண்­டும். உண­வுச் சங்­கி­லி­ யில், முதல் உணவே இலை­கள்­தான்.

எல்­லாத் தாவ­ரங்­க­ளும் இலை­களை உடை­யவை. இலை­கள் உயி­ரி­னங்­க­ளின் முக்­கிய உண­வாக இருக்­கின்­றன. இலை­யில் உள்ள பச்­சை­யம் சூரிய ஆற்­றலை உள்­வாங்கி அதனை உயி­ராற்­ற­லா­க­ வும் உண­வா­க­வும் மாற்­று­கி­றது. அந்­த­வ­கை­யில், தமி­ழர்­தம் வாழ்­வி­ய­லோடு இணைந்த இலை­யாக வாழை­யிலை இருக்­கி­றது.

ஆலய அன்­ன­தா­னம் மற்­றும் பொது விழாக்­க­ளில் விருந்­தி­ன­ருக்கு உணவு பரி­மாற வாழை இலை­யைத்­தான் இன்­ற­ள­வி­லும் பயன்­ப­டுத்தி வரு­கின்­ற­னர். எமது முன்­னோர் உணவு பரி­மா­று­வ­தற்கு வாழை­யி­லை­யைத் தேர்ந்­தெ­டுத்­த­தற்­கான கார­ணம், ‘ஆன்டி ஆக்­சி­டன்ட்’ அதில் அதி­க­ள­வில் இருப்­ப­தே­யா­கும்.

இத­னால் செல் (கலம்) சிதைவு ஏற்­ப­டா­மல் இள­மை­யு­டன் இருக்க முடி­யும். அத்­தோடு மன அழுத்­தம், புற்­று­நோய் மற்­றும் இதய நோய்­க­ளும் தடுக்­கப்­ப­டு­கின்­றன. வாழை­யி­லை­யில் இருக்­கும் Polyphenol, செல்­க­ளில் உள்ள டி.என். ஏவை கதிர்­வீச்­சு­க­ளி­லி­ருந்து பாது­காக்­கி­றது.

சிறு­நீ­ர­கக் கல்­லுக்கு வாழைத்­தண்டு சாறு உகந்­தது என்­பது போல, வாழை­யி­லை­யும் சிறு­நீ­ர­ கம் மற்­றும் விதைப்பை தொடர்­பு­டைய பிரச்­சி­னை­க­ளி­லி­ருந்து எம்­மைப் பாது­காக்­கி­றது. வாழை­யி­லை­யில் உள்ள பச்­சை­யம் நோய் எதிர்ப்பு சக்­தி­யா­க­வும் விளங்­கு­கி­றது.

சூடான சாப்­பாட்டை வாழை இலை­ யில் பரி­மா­றும்­போது அந்த சூட்­டில் இலை லேசாக வெந்து இலை­யின் பச்­சை­யத்­தில் உள்ள Poly phenol சாப்­பாட்­டில் கலந்­து­வி­டும். இதன் மூலம் அதி­லுள்ள உயிர்ச்­சத்து- ஏ, சிட்­ரிக் அமி­லம், கல்­சி­யம் மற்­றும் கரோட் டின் ஆகி­யவை எமக்­குக் கிடைக்­கின்­றன.

வாழை­யி­லை­யின்
சிறப்­பம்­சம்

வாழை­யி­லை­யின் சிறப்­பம்­சமே அதன் குளிர்ச்­சித் தன்­மை­தான். மரத்­தி­ல் இ­ருந்து அறுத்­தெ­டுக்­கப்­பட்ட பின்­பும் கூட வாழை­யிலை ஒட்­சி­சனை வெளி­யிட்­டுக்­கொண்டே இருக்­கும். வாழை­யி­லை­யில் வைக்­கப்­ப­டும் கீரை­கள், காய்­கள், பழங்­கள், பூக்­கள் ஆகி­யவை விரை­வில் வாடாது. பூமா­லை­கள் கூட வாழை­யி­லை­ யில் சுற்­றி­வைக்­கப்­ப­டு­வதை நாம் அறி­வோம்.

அதே­போன்று, தீக்­கா­யங்­க­ளுக்கு ஆளா ­ன­வர்­களை வாழை­யி­லை­யில்­தான் படுக்க வைப்­பார்­கள். வாழை­யி­லை­யின் குளிர்ச்­சி­யும் அது வெளி­யி­டும் ஒட்­சி­ச­னும் தீப்­புண்­ணுக்கு இத­மா­க­வும் விரை­வா­கக் காயங்­களை ஆற்­றக்­கூ­டி­ய­தா­க­வும் இருக்­கி­றது. வாழை­யிலை சரு­மத்­தில் ஒட்­டாது. அத்­து­டன், நோய்த் தொற்­றும் ஏற்­ப­டுத்­தாது. இத­னால், தீக்­கா­யங்­கள் ஏற்­பட்­ட­வர்­க­ளுக்கு இது அரு­ம­ருந்­தா­கப் பயன்­ப­டு­கி­றது.

வேலி­யாக
வாழை­யிலை

கிரா­மத்து மக்­க­ளின் வாழ்­வி­ய­லில் முதன்­மை­யி­டம் பிடிக்­கும் வாழை­யிலை, வேலி அடைப்­ப­தற்­கும் பயன்­ப­டு­வது அதன் மற்­றொரு சிறப்­பம்­சம். வாழை குலை­களை ஈன்­ற­தும், குலையை வெட்­டிய பின் அதன் ஏனைய பாகங்­களை ஒவ்­வொரு தேவைக்­கா­க­வும் பயன்­ப­டுத்­து­வோம். அதில் ஒன்­று­தான் இலை­க­ளின் வேலிப் பயன்­பாடு.

இது சூழ­லுக்­குப் பாது­காப்­பா­ன­து­டன், செல­வும் குறைந்­தது. நேர்த்­தி­யாக அடைத்­தால், வேலி­யும் அழ­காக இருக்­கும். வாழை­யிலை மட்­டு­மல்­லாது, வாழை மடல்­க­ளைக் கொண்­டும் சிலர் வேலி அடைப்­ப­துண்டு. இது­வும் சூழ­லுக்­குப் பாது­காப்­பா­ன­து­டன், அழ­கா­ன­தும் கூட.பொருட் செல­வும் இல்லை.

பூ, காய், கனி
இவற்­றின் பயன்­பா­டு­கள்

பூ முதல் கனி­வரை மனி­தர்­க­ளால் உண­வுக்­கா­கப் பயன்­ப­டுத்­தÃப்படும் தாவ­ரம் வாழை மரம். வாழை­யில் பல இனங்­கள் இருந்­தா­லும், அந்­தந்த இனத்­துக்­கேற்ப அவை தரும் பூக்­க­ளும் சிறப்­பா­னவை. பொது­வாக, வாழைப்­பூ­வில் உயிர்ச்­சத்து- ‘பி’ உண்டு. பெண்­க­ளின் கர்ப்­பப்­பைக்கு இது மிகுந்த பல­ம­ளிக்­கி­றது. நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்­கும் இது சிறந்­தது. மலட்­டுத் தன்­மையை நீக்க வல்­லது. மாதத்­தில் இரண்டு, மூன்று தட­வை­கள் இதனை உண­வில் சேர்த்­துக்­கொள்­வது பய­ன­ளிக்­கும்.

இதே­போன்று வாழைக் கா­யும் கறி­யாக்க, பொரி­யல் செய்ய, சம் பல் செய்ய என்று உண­வில் பயன்­ப­டு­கி­றது. இது விசேட தினங்­க­ளில் உண­வில் சேர்த்­துக்­கொள்­ளப்­டும். இதி­லும் பல­வ­கைச் சத்­துக்­கள் உண்டு. அதே­போன்று, ‘ஏழை­க­ளின் அப்­பிள்’ என்று அழைக்­கப்­ப­டும் வாழைப் பழ­மும் மிகுந்த பய­ன­ளிக்­கும் உண­வுப்­பொ­ருள்.

இது மிகக் குறைந்த விலை­யில் கிடைக்­கும். வாழை­யின் ஒவ்­வொரு இனத்­தி­லுள்ள பழங்­க­ளும் ஒவ்­வொரு போச­னை­யைக் கொண்­டி­ருந்­தா­லும், இதில் பொது­வாக உயிர்ச்­சத்து- ‘ஏ’ உள்­ளது. பொட்­டா­சி­யம் சத்­தும் இதில் செறி­வாக உள்­ளது. இரண்டு நாட்­க­ளுக்கு ஒரு­முறை இதனை உட்­கொண்டு வந்­தால், சிறப்பு.

வாழை மட­லின்
பயன்­பா­டு­கள்

வாழை­யி­லை­யைப் போன்றே வாழை மட­லும் பல தேவை­க­ளுக்­கா­கப் பயன்­ப­டு­ கின்­றது. குறிப்­பாகப் பச்சை வாழை மடல் அல்­லது தண்டு, பூமாலை வாடா­மல் இருப்­ப­தற்கு இது பயன்­ப­டு­கின்­றது. அத்­து­டன், கற்­பூர தீபம் ஏற்­று­வ­தற்­கும் இது பயன்­ப­டு­கின்­றது.

இது காய்ந்­த­வு­டன், விருந்தோம்பலுக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. இதில் உண­வுண்­ப­தும், வாழை­யி­லை­யில் உண்­பது போன்று சுவை­யாக இருக்­கும். உட­லுக்­கும் அநேக நன்மை பயக்­கும். இதன் மூலம் பெறப்­ப­டும் வாழை­நார்­கள், பூமாலை கட்­டு­வ­தற்­கும் ஏனை­ய­வற்­றைக் கட்­டு­வ­தற்­குக் கயி­றா­க­வும் பயன்­ப­டு­கி­றது.

கிரா­மத்­துப் பெண் பிள்­ளை­கள், தலை­வா­ரிப் பின்னி வாழை நாரி­னால் கட்­டு­வது வழக்­கம். அவ்­வாறு செய்­தால், நீண்ட கருங்­கூந்­தல் வள­ரும் என்ற நம்­பிக்கை அவர்­கள் மத்­தி­யில் இருந்­தது. இன்­றும் இந்த நம்­பிக்கை கிரா­மப்­பு­றங்­க­ளில் இருப்­ப­தைக் காண­மு­டி­கி­றது.

பயிர்­க­ளின் கள­மாக
மர­ணித்த வாழை

நகர்ப்­பு­றங்­க­ளில் போதிய நில­வ­சதி இருப்­ப­தில்லை. அத்­த­கை­ய­வர்­கள், சாடி­க­ளி­லும் மேல்­மா­டி­க­ளி­லும் அலங்­கா­ரச் செடி­க­ளை­யும் பயன்­தரு செடி­க­ளை­யும் நடுகை செய்­கின்­ற­னர். மேல்­மா­டி­க­ளில் பார்த்­தால், அநே­க­மான செடி­கள் தொங்கு நிலை­யில் காணப்­ப­டும். இவை அழ­கைக் கொடுப்­ப­து­டன், சூழ­லுக்கு வளத்­தை­யும் அளிக்­கின்­றன.

இவற்­றைப் போலவே, குலை ஈன்­ற­பின் வெட்­டப்­ப­டும் வாழை மரத்­தினை இரண்­டாக்கி அதில் மண்­ணிட்டு நிரப்பி சிறு சிறு தாவ­ரங்­களை நடுகை செய்­ய­லாம். குறிப்­பாக கத்­தரி, வெண்டி, மிள­காய் முத­லான பயன்­தரு செடி­களை நடுகை செய்­ய­லாம். வாழை மரத்­தில் நடுகை செய்­யப்­ப­டும் தாவ­ரங்­க­ளுக்­குத் தண்­ணீ­ரும் அதி­க­ள­வில் ஊற்­றத் தேவை­யில்லை. ஏனென்­றால், அந்த மரம் மிகுந்த ஈர­லிப்­பைக் கொண்­டது. அத்­து­டன், ஊற்­றும் தண்­ணீ­ரை­யும் சேமித்து வைத்­தி­ருந்து செடி­களை வாட­வி­டாது பாது­காக்­கும்.

எது­வும் கழி­வல்ல

இவ்­வாறு வாழ­வைக்­கும் வாழை மரத்­தின் பாகங்­கள் எது­வுமே கழி­வல்ல. மனி­தப் பயன்­பாடு தவிர்ந்த ஏனை­யவை அனைத்­தும் சிறந்த பச­ளை­க­ளா­கப் பயன்­ப­டு­கின்­றன. இந்­தப் பச­ளை­கள் சூழ­லுக்­குத் தீங்கு பயக்­கா­தவை.

தலை முதல் இலை வரை தலை­முறை தலை­மு­றை­யாய் மனி­தர்­களை வாழ­வைத்­துக்­கொண்­டி­ருக்­கும் வாழை மரத்­தின் அநேக பயன்­பா­டு­களை இன்­றைய இயந்­திர உல­கம் மறந்து வரு­கின்­றது. ஆத­லால், இதனை நினை­வு­றுத்த வேண்­டி­யது எமது கடமை.