ஆசிய யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீனாவில் ஆசிய யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்விலேயே, இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 300 யானைகள் சீனாவில் அதிகரித்துக் காணப்படுகின்றன.

ஆசிய யானைகளை சீனா மிகவும் கவனமாகப் பாதுகாத்து வரும் நிலையில், இந்த யானைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றது.

இந்த யானைகள் அதிக கருவூட்டல் காலத்தைக் கொண்டவை என்பதுடன், இவற்றின் பிறப்பு விகிதசாரம் குறைவானதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like