உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வு

உலக சைவ இளைஞர் மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை யாழ். நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இடம்பெற்றன.

அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில் அதன் அமைப்பாளர் ப.நந்தகுமார் தலைமையில் இடம்பெற்றது.

மாநாட்டின் இருநாள் நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்த தமிழக பேரூர் ஆதீன இளைய பட்டம் தவத்திரு மருத்தாச்சலம் அடிகளார் நிகழ்வின்போது கெளரவிக்கப்பட்டார்.

மாநாட்டின் இன்றைய  நிகழ்வில் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தம் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

You might also like