வடகொரியாவுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

48 மணிநேர இடைவெளியில் இரண்டாவது தடவையாக

‘‘அமெ­ரிக்­கா­வையோ, அமெ­ரிக்­கா­வின் குவாம் தீவையோ அல்­லது அமெ­ரிக்­கா­வின் நட்பு நாடு­க­ளையோ வட­கொ­ரியா இலக்­கு­வைத்­தால் அந்த நாடு நினைத்­துப் பார்க்க முடி­யாத பேர­ழி­வைச் சந்­திக்­கும்’’ என்று தெரி­வித்­தார் அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப்.

நியூ­ஜெர்­சி­யில் உள்ள பெஸ்ட்­மி­னிஸ்­டர் என்ற இடத்­தில் தனது விடு­மு­றை­யைச் செல­விட்டு வரு­கி­றார் ட்ரம்ப். அங்கு நேற்­று ­முன்­தி­னம் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்பு ஒன்­றில் உரை­யாற்­று­கை­யி­லேயே ட்ரம்ப் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘வட­கொ­ரி­யா­வின் மிரட்­டலை எப்­படி கையாள்­வது என்பது குறித்து அமெ­ரிக்கா திட்­ட­மிட்­டுள்­ளது. அதைப்­பற்றி பேச வேண்­டி­ய­தில்லை. நான் ஏனைய அதி­பர்­களைப் போன்று இல்லை. கொரி­யத் தீப­கற்­பத்­தில் அமெ­ரிக்க இரா­ணு­வம் முகா­மிட்­டுள்­ளது. இது குறித்து நான் எது­வும் பேச­வில்லை. ஆனால் அங்கு நடக்­க­போ­வது என்ன என்­பதை பார்ப்­போம்.

வட­கொ­ரி­யாவைப் பொறுத்­த­வரை அதன் நட­வ­டிக்­கைகள் எமக்கு கடும் கோபத்தை அதி­க­ரிக்­கும் என்­பதை என்­னால் உறு­தி­யாக கூற­மு­டி­யும். அமெ­ரிக்­கா­வையோ அல்­லது அதன் நட்­பு­நா­டு­க­ளையோ வட­கொ­ரியா தாக்க நினைத்­தால், நினைத்து பார்க்க முடி­யா­த­ படி இழப்­பு­களை அந்த நாடு சந்­திக்­கும்’’ என ட்ரம்ப் மேலும் தெரி­வித்­தார்.

1945ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்­தக் காலப்பகுதிகளில்தான் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகர்கள் மீது அமெரிக்காவால் அணு குண்டு வீசப்பட்டது. அந்த வாரத்தை நினைவுகூரும் இந்தக் காலகட்டத்தில் மூன்றாம் உலகப் போருக் கான போர்ப் பதற்றம் கொரியத் தீபகற்கத்தில் ஏற்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

You might also like