தண்டப் பணம் அதிகரித்தமை அநீதியானது – மகிந்த ராஜபக்ச!

மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்து தண்டப் பணத்தை அதிகரித்ததால் முச்சக்கரவண்டி சாரதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேவேளை, அறிமுகம் செய்துள்ள புதிய மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் படி தண்டப்பணம் 25 ஆயிரம ரூபா வரை அதிகரித்துள்ளமை அநீதியானது எனத் தெரிவித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது என்று அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷிரந்த அமரசிங்க அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

You might also like