Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

குடி­தண்ணீருக்கு அந்­த­ரிக்­கும் பூந­க­ரிப் பிர­தேச மக்­களுக்கு மேலும் 30,000 லீற்­றர் தேவை

கிளி­நொச்சி – பூந­கரி பிர­தேச மக்­க­ளின் குடி­தண்­ணீர்த் தேவை­யைப் பூர்த்தி செய்­வ­தற்கு மேலும் முப்­ப­தா­யி­ரம் லீற்­றர் குடி தண்­ணீர் தேவைப்­ப­டு­கி­றது என பிர­தேச செய­லா­ளர் கிருஸ்­ணேந்­தி­ரன் தெரி­வித்­தார்.

அண்­மை­யில் இலங்கை செஞ்­சி­லு­வைச் சங்­கத்­தின் தலை­மைச் செ­ய­ல­கத் துணைத் த­லை­வர் உள்­ளிட்ட குழு­வி­னர் கிளி­நொச்சி மாவட்­டத்­தின் வறட்சி நிலை­மை­கள் தொடர்­பில் நேரில் ஆராய்ந்து, மக்­க­ளுக்கு உத­வும் பொருட்டு பிர­தேச செய­லா­ளரைச் சந்­தித்­த­போதே அவர் இத­னைத் தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கடும் வறட்சி நில­வு­கி­றது. குடி­தண்­ணீர் ஒரு பெரும் பிரச்­ச­னை­யா­கக் காணப்­ப­டு­கி­றது. குறிப்­பா­கப் பூந­க­ரிப்­பிர­தேசம் அதி­க­ள­வில் பாதிக் கப்பட்­டுள்­ளது. பூந­க­ரிப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வில் உள்ள 15க்கும் அதி­க­மான கிரா­மாங்­கள் முற்­றா­கக் குடி­தண்­ணீர் இன்­றிக் காணப்­ப­டு­கின்­றன.

இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்கு மாவட்ட இடர் முகா­மைத்­துவ மத்­திய நில­யம் பூந­க­ரிப் பிர­தேச சபை­யு­டன் இணைந்து குடி­தண்­ணீர் விநி­யோ­கத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றது.

வறட்­சி­யி­னால் பாதிக்­கப்­பட்ட 5 ஆயி­ரத்து604 குடும்­பங்­க­ளில் 2 ஆயி­ரத்து 160 குடும்­பத்தி­னருக்கு மாத்­தி­ரம் குடிதண்­ணீர் விநி­யோ­கிக்­கப்­படு­கிறது.
மேலும் 3ஆயி­ரத்து144 குடும்­பங்­க­ளுக்­கான குடி­தண்­ணீர்த் தேவை­யைப் பூர்த்தி செய்­ய­மு­டி­யா­மல் உள்­ளது -– என்­றார்.

குறித்த சந்­திப்­பில் கிளி நொச்சி செஞ்­சி­லு­வைச் சங்த்­தின் தலை­வர் வேழ­ மா­லி­கி­தன், செயலாளர் சேது­ பதி, பிரி­வுத்­ ­தலை­வர் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர்.

இதன் பின்­னர் செஞ்­சி­லு­வைச்­சங்­கத் தலை­மைச் செய­ல­கத் துனைத்­த­லை­வர் உள்­ளிட்ட குழு­வி­னர் பூந­க­ரிப்­பி­ர­தே­சத்­தின் கறுக்­காய்த்­தீவு, ஞானி­ம­டம் மற்­றும் செட்­டி­ய­கு­றிச்சி போன்ற கிரா­ மங்­க­ளுக்­குச் சென்று நில­மை­களை நேரில் ஆராய்ந்­த­னர்.

You might also like