Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

அரச காணியை ஆக்கிரமித்து மாந்தையில் அன்னாசி செய்கை

இஸ்ரேல் குடிமகனின் நடவடிக்கை குறித்து மக்கள் விசனம்

மன்­னார் – மாந்தை மேற்­குப் பிர­தேச செய­ல­கத்­துக்­குட்­பட்ட பருப்­புக்­க­டந்­தான் பகு­தி­யில் இஸ்­ரேல் பிரஜை ஒரு­வ­ரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் அன்­னா­சிப் பயிர்ச்­செய்கை தொடர்­பில் பிர­தேச மக்­கள் விச­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

இது­தொ­டர்­பல் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:
மேற்­படி வெளி­நாட்­டுக் குடி­ ம­கன் 2014ஆம் ஆண்டு தொடக்­கம் அன்­னா­சிச் செய்­கை­யில் ஈடு­பட்டு வரு­கி­றார். இதற்­காக மன்­னார், பருப்­புக்­க­டந்­தான் பகு­தி­யில் சுமார் 160ஏக்­கர் காடு அழிக்­கப்­பட்­டுள்­ளது.

வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மான குறித்த காணி இலங்­கை­யர் ஒரு­வர் ஊடாக இஸ்­ரேல் நாட்­டுப் பிர­ஜைக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக மாந்தை மேற்­குப் பிர­தேச செய­லா­ளர் எஸ். கேதீஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

‘‘இந்த 160 ஏக்­கர் காணி­யில் சுமார் 100 ஏக்­கர் காணி பொது­மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி. அவை 1989ஆம் ஆண்டு மாவட்­டச் செய­ல­கத்­தால் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டவை. எனி­னும், குறித்த காணி­யில் குடி­யி­ருந்த மக்­கள் இடம்­பெ­யர்ந்து தற்­போது இந்­தி­யா­வில் வாழ்ந்து வரு­கின்­ற­னர்.

மக்­க­ளுக்கு உரித்­தான காணி­க­ளைப் பெற்­றுத்­த­ரு­மாறு வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தி­ன­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளோம்” என மாந்தை மேற்­குப் பிர­தேச செய­லா­ளர் மேலும் குறிப்­பிட் டார்.

இது­தொ­டர்­பில் மன்­னார் பிராந்­திய வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­கள அதி­காரி ஈ.ஜே.எம்.ஜே.கே.ஏக்­க­நா­யக்க தெரி­வித்­த­தா­வது,

இதற்கு யார் அனு­மதி வழங்­கி­னர் என எமக்­குத் தெரி­யாது. 2015ஆம் ஆண்டு நான் மன்­னார் பிராந்­திய அதி­கா­ரி­யா­கப் பொறுப்­பேற்­ற­தன் பின்­னர் சட்­ட­வி­ரோ­த­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டும் இந்­தச் செயற்­பாட்­டுக்கு எதி­ராக மன்­னார் நீதி­மன்­றத்­தில் வழக்­குத் தாக்­கல் செய்­துள்­ளோம்.அரச இடத்தை மீளப் பெற்­றுக்­கொள்­ளல், காட­ழிப்பு ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக இரண்டு வழக்­கு­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளன –என்­றார்.

களை­நா­சி­னி­கள் மற்­றும் இர­சா­ய­னங்­கள் இன்றி எவ்வாறு இயற்­கை­யா­கப் பயிர்ச்­செய்­கையை முன்­னெ­டுப்­பது என்­பது தொடர்­பில் இலங்கை விவ­சா­யி­க­ளுக்­குக் காண்­பிப்­ப­தற்­கா­கவே நாம் இலங்கை வந்துள்ளோம்.

மன்­னா­ரில் அன்­னாசி பயி­ரி­டு­வது கடி­னம் என மக்­கள் கூறி­ னர். ஆனால் பயி­ரிட முடி­யும் என்­பதை நாம் அவர்­க­ளுக்­குக் காண்­பித்­துள்­ளோம்” என்று குறித்த வெளி­நாட்­டுக் குடி­ம­கன் தெரி­வித்­தார்.

You might also like