Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

தடை உத்தரவை  மீளப் பெறுங்கள் – உதயங்கவின் சட்டத்தரணிகள் கோரிக்கை

இலங்­கைக்­கான ரஷ்யாவின் முன்­னாள் தூது­வர் உத­யங்க வீர­துங்­கவைக் கைது செய்­வ­தற்­கும், அவ­ரது வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்­கும் தடை விதித்­தும் வழங்­கப்­பட்­டுள்ள நீதி­மன்ற உத்­த­ர­வு­களை மீளப்­பெ­று­மாறும் அவ­ரது சட்­டத்­த­ர­ணி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.
மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் மிக் வானூர்தி கொடுக்­கல் வாங்­கல் ஊழல் மோச­டி­கள் தொடர்­பி­லான விசா­ர­ணைக்­காக மகிந்த ராஜ­பக்­ச­வின் உற­வி­ன­ரான உத­யங்க வீர­துங்க தேடப்­பட்டு வரு­கின்­றார்.
அவர் தொடர்­பான வழக்கு கொழும்புக் கோட்டை நீதி­வான் மன்­றில் விசா­ர­ணைக்கு நேற்று முன்­தி­னம் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
அவர் கைது செய்­யப்­ப­டு­வதைத் தவிர்ப்­ப­தற்­காக அடிக்­கடி ஒரு நாட்­டை­விட்டு மற்­று­மொரு நாட்­டிற்குச் செல்­வ­தாக நீதி­மன்­றில் சுட்­டிக்­காட்­டிய குற்­றப் புல­னாய்­வுப் பிரிவுப் பொலி­சார் அவ­ரது இரா­ஜ­தந்­திரக் கட­வுச் சீட்­டை­யும் அவர் பெய­ரில் இருக்­கும் ஏனைய கட­வுச் சீட்­டுக்­க­ளை­யும் இரத்­துச் செய்­யு­மாறு கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர்.
இந்­தக் கோரிக்கை ஏற்­கப்­பட்டு தடை விதிக்­கப்­பட்டு, அவரைக் கைது செய்து நாட்­டிற்கு அழைத்து வரு­வ­தற்­காகப் பன்­னாட்­டுப் பொலி­சா­ரின் உத­வியை நாடு­வ­தற்­கும் அனு­மதி வழங்­கப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like