Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

அதி­கா­ரத்தைத் தவ­றாகப் பயன்­ப­டுத்த அனு­ம­தி­யோம்

நிமல்கா பெர்னான்டோ தெரி­விப்பு

இன­வாத, மத­வாத மற்­றும் அதி­கா­ரத்தைத் தவ­றாகப் பயன்­ப­டுத்­தும் அர­சி­யல் கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்த இட­ம­ளிக்­கப் போவ­தில்லை.

இவ்­வாறு சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர் நிமல்கா பெர்னான்டோ தெரி­வித்­தார். கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்ததாவது;-

இரண்டு வரு­டங்­கள் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யில் 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தத்­தின் உள்­ள­டக்­கங்­களை வாசித்துப் பார்த்­தீர்­களா என நாம் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­ட­மும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வி­ட­மும் கேட்க விரும்­பு­கின்­றோம்.

அந்த ஒப்­பந்­தத்­தின் அடிப்­படை அம்­சங்­களை கைவிட நாம் தயா­ரில்லை. 1994ஆம் ஆண்டு நடந்த சில குழப்­பங்­க­ளால் அன்று அந்தப் போராட்­டத்தைக் கைவிட வேண்டி ஏற்­பட்­டது. மீண்­டும் இன­வாத, மத­வாத மற்­றும் அதி­கா­ரத்தை தவ­றாக பயன்­ப­டுத்­தும் அந்த அர­சி­யல் கலா­சா­ரத்தை கொண்­டு­வர நாம் இட­ம­ளிக்­கப்­போ­வது இல்லை.

94ஆம் ஆண்­டைப்­போல் இந்த போராட்­டத்தை கைவிட நாம் தயா­ரில்லை. இது எமக்கு கிடைத்­தி­ருக்­கும் பொன்­னான வாய்ப்பு. தமிழ்த் தேசிக் கூட்­ட­மைப்பு, மலை­யக அர­சி­யல் கட்­சி­கள். முஸ்­லிம் கட்­சி­கள், ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறிலங்கா சுதந்­தி­ரக் கட்சி அனைத்­தும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­ய­மையை ஞாப­கப்­ப­டுத்­தவே நாம் எதிர்­வ­ரும் 15ஆம் திகதி வீதிக்கு இறங்­க­வுள்­ளோம். மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை கூட்­ட­ரசு நிறை­வேற்ற வேண்­டும்.- என்­றார்.

You might also like