இன்றைய மோதல்கள்

மகா­லிங்­கம்
ஞாப­கார்த்த
ரி-–20 தொடர்

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் மகா­லிங்­கம் ஞாப­கார்த்­தக் கிண்­ணத்­துக்­காக ரி-–20 தொடரை நடத்தி வரு­கி­றது. பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூரி மைதா­னத்­தில் இன்று முற்­ப­கல் 11 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் மானிப்­பாய் பரிஷ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பற்­றி­ சி­யன்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. பிற்­ப­கல் 2 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் ஓல்ட் கோல்ட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சென்­றல் விளை ­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

சரஸ்­வதி ச.ச.நி.
தாச்­சித் தொடர்

நாவற்­குழி சரஸ்­வதி சன­ச­மூக நிலை­ய­மும், விளை­யாட்­டுக் கழ­க­மும். இணைந்து யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் தாச்­சித் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இன்று இரவு 7.15 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் பண்­டத்­த­ரிப்பு சாந்தை விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து இரு­பாலை விக்­னேஸ்­வரா விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. இரவு 8.15 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் புது­ம­டம் வைகறை விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து கோண்­டா­வில் மறு­ம­லர்ச்சி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

கரப்­பந்­தாட்­டம்

யாழ்ப்­பாண மாவட்ட கரப்­பந்­தாட்­டச் சங்­கம் தனது அங்­கத்­து­வக் கழ­ கங்­க­ளுக்­கி­டை­யில் நடத்­தத் திட்­ட­மிட்ட ‘ஏ’ பிரிவு அணி­க­ளுக்கு இடையிலான கரப்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் நீர்­வேலி ஐக்­கிய விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இன்று இடம்­பெ­ற­வுள்­ளன. இன்று மாலை 4.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக அணியை எதிர்த்து புத்­தூர் வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. மாலை 4.30 மணிக்கு இடம் பெறும் ஆட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட் டுக் கழக அணியை எதிர்த்து ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

பிரண்ட்ஸ்
கழ­கத்­தின்
துடுப்­பாட்­டம்

வவு­னியா பிரண்ட்ஸ் விளை­யாட்­டுக் கழ­கம் தனது 9ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு வவு­னியா மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கத்­தில் அங்­கம் வகிக்­கும் கழ­கங்­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் ரி-–20 துடுப்­பாட் டத் தொட­ரின் ஆட்­டங்­கள் சில, குறித்த கழக மைதா­னத்­தில் இன்று இடம்­பெ­ற­வுள்­ளன. இதில் காலை 8 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் ஸ்ரார் பைட் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பிரண்ட்ஸ் விளை­யாட்­டுக் கழக ‘பி’ அணி மோத­வுள்­ளது. பிற்­ப­கல் 12.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் யுனி பைட் விளை­யாட்­டுக் கழக‘பி’ அணியை எதிர்த்து செவ்­வா­னம் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

You might also like