கபடித் தொடரில்  விண்மீன் சம்பியன்

பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழகம் நடத்திய சூரியகுமாரன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான கபடித் தொடரில், பலாலி விண்மீன் அணி சம்பியனானது.

ஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் கபடித் திடலில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து பலாலி விண்மீன் விளையாட்டுக் கழக அணி மோதியது. 41:32 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றிபெற்று கிண் ணம் வென்றது பலாலி விண்மீன். பலாலி விண்மீன் அணியின் சாந்தன் ஆட்ட நாயகனாகத் தெரிவானார்.

தவற விடாதீர்கள்:  எவர்கிறீன் மகுடம் சூடியது!

You might also like