Mesothelioma Law Firm, Donate Car to Charity California, Donate Car for Tax Credit, Donate Cars in MA, Donate Your Car Sacramento, How to Donate A Car in California, Sell Annuity Payment, Donate Your Car for Kids, Asbestos Lawyers, Structures Annuity Settlement, Car Insurance Quotes Colorado, Annuity Settlements, Nunavut Culture

புதிய அரசமைப்பு விடயத்தில் மைத்திரியின் அவசரமான தலையீட்டை கூட்டமைப்பு வலியுறுத்தும்

புதிய அர­ச­மைப்பு முயற்சி தாம­த­ம­டைந்­து வரு­வ­தால் இந்த விட­யத்­தில் உட­ன­டி­யா­கத் தலை­யிட்டு புதிய அர­ச மைப்பு உரு­வாக்­கத்தை விரை­வு­ப­டுத்­து­மாறு அரச தலை­ வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் வலி­யு­றுத்­த­வுள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.

இதற்­காக அவ­ரைச் சந் திப்­­­ப­தற்கு நேரம் ஒதுக்­கித் தரு­மாறு கட்சி கேட்­டுள்­ளது. எனி­னும் இது­வரை சந்­திப்­புக்கு நேரம் வழங்­கப்­ப­ட­வில்லை.

‘‘அரச தலை­வ­ரைச் சந்­திப்­ப­தற்கு நாம் ஏற்­க­னவே நேரம் ஒதுக்­கித் தரு­மாறு கேட்­டி­ருந்­தோம். இன்­னும் கிடைக்க­ வில்லை. வடக்­கில் ஏற்­பட்ட அமை­தி­யின்மை உள்­பட பல்­ வேறு விட­யங்­கள் தொடர்­பி­லும் அந்­தச் சந்­திப்­பில் பேச எண்­ ­ணியுள்­ளோம்.

அதே­ச­ம­யத்­தில் அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­ தில் அரச தலை­வர் உட­ன­டி­யா­கத் தலை­யி­ட­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­து­வார்’’ என்று தெ­ரி­வித்­தார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன்.

‘‘யாழ்ப்­பா­ணத்­தில் தொட­ரும் அமை­தி­யின்மை மற்­றும் வழ­மைக்கு மாறான நிலமை தொடர்­பில் பேசு­வ­தற்கு நேரம் வழங்­கு­மாறு கோரி­யி­ருந்­தோம். சந்­தர்ப்­பம் கிடைக்க வில்லை. எனி­னும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­ சே­னவை விரை­வில் சந்­திப்­போம். அப்­போது இந்த விட­ யத்தை இறுக்­க­மாக அவ­ரி­டம் எடுத்­து­ரைப்­பேன்’’ என றார் அவர்.

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான வழி­காட்­டல் குழு­வின் இறுதி அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டும் அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்க முடி­யாத நிலையே இருக் கின்­றது. சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் தமது யோச­னையை முன்­வைக்­கா­த­தால் அது தாம­த­ம­டை­கின்­றது.

இந்­தச் சிக்­கலை அடுத்தே இந்த விட­யத்­தில் உன­டி­யா­கத் தலை­யி­டு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் கூட்­ட­மைப்பு கேட்­க­வுள்­ளது.

You might also like

Comments