பொலிவியாவில் காட்டுத் தீ : இருவர் உயிரிழப்பு

தெற்கு பொலிவியாவின் மலைப்பாங்கான பகுதியில் திடீரென்று தீ பரவியதைத் தொடர்ந்து, இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தாரிஜா நகரைச் சுற்றியுள்ள மலைப் பகுதியிலேயே தீ பரவியுள்ளது. இந்தநிலையில், அந்தப் பகுதியானது ஒரே புகை மூட்டமாகக் காணப்படுவதுடன், சுமார் 7 ஆயிரம் ஹெக்டேயர் நிலப்பரப்பு தீயில் கருகியுள்ளது.

அந்தப் பகுதியில் பரவியுள்ள தீயை அணைப்பதற்கான நடவடிக்கையில், தீயணைப்புப் பிரிவினருடன் இணைந்து செயற்படுவதற்கு இராணுவத்தினரின் உதவி கோரப்பட்டுள்ளது.

ஐந்து ஹெலிகொப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் அங்கு தீயை அணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இந்தப் பகுதியை அண்டி வாழ்ந்து வருகின்ற சுமார் 700 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுப், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

You might also like