பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு : 15 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில், சுமார் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளனர்.

குவாட்டா நகரில் நேற்று இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

மிகவும் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்ட சந்தையொன்றுக்கு அருகில் இடம்பெற்ற இந்தக் குண்டு வெடிப்பை அடுத்து, மக்கள் சிதறி ஓடியுள்ளனர்.

அத்துடன், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்த நிலையில், அம்புலன்ஸ்கள் உடனடியாக வரவழைக்கப்பட்ட நிலையில், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ள பகுதியில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை.

மேற்படி நகரில் ரோந்து சென்றிருந்த துணை இராணுவப் படையினரை இலக்கு வைத்து இந்தக் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பகிஸ்தான் மாகாண உட்துறை அமைச்சர் சப்ராஸ் வுகுடி தெரிவித்துள்ளார்.

தவற விடாதீர்கள்:  பிரி­வ­தற்­காக 1,050,000 கோடி ரூபா வழங்க பிரிட்­டன் தயார்!!

You might also like