காணாமற்போனோர் அலுவலகத்துக்கு- சிறிதுகாலம் அவகாசம் கொடுங்கள் !!

Get real time updates directly on you device, subscribe now.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகத்தை உடன் புரிந்து கொள்ள முடி­யா­வி­டி­ னும் அவர்­க­ளுக்கு அவ­கா­சம் கொடுத்­துப் பார்ப்­பது நல்லது என இலங்­கைக்­கான கனே­டி­யத் தூது­வர் டான்ட் மிக்­கினோ தெரி­வித்­தார்.

கன­டா­வின் இலங்­கைக்­கான தூது­வர் டான்ட் மிக்­கினோ கடந்த 9ஆம் திகதி மன்­னா­ருக்கு வருகை தந்­துள்­ளார். மன்­னார் மாவட்டக் குடிமக்கள் குழு அலு­வ­ல­கத்­தில் தலை­வர் அருட்­பணி ஞானப்­பி­ர­கா­சம் அடி­க­ளார் உள்­ளிட்ட ஆளு­நர் சபைப் பிரதி நிதி­களை சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார். குடிமக்கள் குழு­வி­னர் கேட்ட கேள்வி ஒன்­றுக்­குப் பதி­ல­ளிக்­கு­ம் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

இலங்­கை­யில் சமா­தா­னத்­தை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்­தும் விட­யத்­தில் கனே­டிய அரசு பெரும் ஆத­ரவை வழங்கி வரு­கின்­றது.

இத­னால் வடக்கு – கிழக்­குப் பகு­திக்­குச் சென்று மக்­க­ளின் நிலைப்­பாட்டை அறிந்து கொள்­ளும் முக­மா­கவே நான் மன்­னா­ருக்கு வந்­துள்­ளேன்.

நான் இலங்­கைக்­கான கனே­டியத் தூது­வ­ராக வந்து ஒன்­பது மாதங்­கள் தான்­ஆகின்றன. தற்பொழுது மன்னாருக்கு வந்தது எனக்கு முதல் தடவையாகும். மன்னார் மாவட்டக் குடிமக்கள் குழுவாகிய நீங்கள் என்னிடம் என்னக் கேட்க விரும்புகின்றீர்கள்? என்று கனேடியத் தூதுவர் வினவினார்.

காணாமல் ஆக்கபட்டவர்களின் விடய மாகத் திறக்­கப்­பட்டுள்ள அலு­வ­ல­கம் தொடர்பாகத் கனே­டி­யத் தூது­வ­ரு­டன் குடிமக்கள் குழு­வி­னர் உரை­யா­டி­னர்.

இந்த அலு­வ­ல­கம் அர­சுக்­குச் சாத­க­மா­கத்­தான் செயற்­ப­டும் போல் எங்­க­ளுக்­குச் சந்­தே­கம் ஏற்­ப­டு­கி­றது என்று குடிமக்கள் குழு­வின் தலை­வர் அருட்­பணி ஞானப்­பி­ர­கா­சம் தெரி­வித்­தார்.
இதற்­குப் பதி­ல­ளித்த தூது­வர்:

இந்த அலு­வ­ல­கத்தை முன்னெடுத்­துச் செல்­ப­வர் சாலிய பீரீஸ். அவர் மிக­வும் நல்­ல­வர். இருந்தும் சிறிது காலத்­துக்­குச் சந்­தர்­ப்பத்தை அவர்களுக்­குக் கொடுத்து பாருங்­கள். இப்­பொ­ழுது அவர்­க­ளின் செயற்­பாட்டை உடன் கணிக்க முடி­யாது – என்­றார்.

இந்த விட­யம் தொடர்­பில் தூது­வ­ரு­டன் சில­ம­ணி­நே­ரங்­கள் கலந்­து­ரை­யா­டப்பட்­டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of