பாடத்திட்டத்துக்குள் -தற்காப்புக் கலையை உள்வாங்க வேண்டும்!!

Get real time updates directly on you device, subscribe now.

இளைய சமு­தா­யம் பாது­காப்­பாக நட­மாடுதல் மற்றும் பாட­சா­லை­க­ளுக்­குச் சென்று பாது­காப்­பாக வீடு திரும்­பு­வ­தற்­காகப் பாட­சா­லைக் கல்­வி­யில் தற்­காப்­புக் கலையைப் பாடத்­திட்­டத்­துக்­குள் உள்­ள­டக்க வேண்­டும் என நல்­லூர் பிர­தேச சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் நான்­கா­வது அமர்வு சபை­யின் தவி­சா­ளர் தியா­க­மூர்த்தி தலை­மை­யில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் சபை உறுப்­பி­னர் சி.கௌசலா குறித்த பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்­தார்.

அவர் தனது பிரே­ர­ணை­யில் தெரி­வித்­த­தா­வது:

எமது இளைய சமூ­தா­யம் நாளாந்­தம் பல இன்­னல்­க­ளுக்கு முகங்கொடுத்து வரு­கின்­ற­னர். அதி­லும் குறிப்­பாக பாட­சாலை மாண­வர்­கள் நாளாந்­தம் சவால்­களை எதிர்­கொண்டே கல்­வியைப் பயில்­கின்­ற­னர். அவர்­க­ளின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கவே உள்­ளது.

ஆகவே மாண­வர்­கள் தங்­களை தாங்­களே பாது­காத்­துக் கொள்ள பாட­சாலை மாண­வர்­க­ளுக்குத் தற்­காப்­புக் கலை­கள் புகட்­டப்­பட வேண்­டும். எனவே பாட­சா­லை­க­ளில் மாண­வர்­க­ளின் பாடத்­திட்­டத்­துக்­குள் இந்­தக் கலையை இணைக்க வேண்­டும்.

இதற்குக் கொழும்பு கல்வி அமைச்சு விரை­வாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என தனது பிரே­ர­ணையை முன்­மொ­ழிந்­தார். இந்­தப் பிரே­ர­ணையை சபை உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொள்ள தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. தீர்­மா­னத்­தின் பிரதி கொழும்பு கல்வி அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of