வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

பத்தேகம – கொடவத்த தெற்கு பிரதேசத்தில் வீடு ஒன்றில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பத்தேகம நீதவான் நீதிமன்றின் பின்புறத்தில் உள்ள வீட்டிலே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று, வீட்டில் நித்திரை செய்து கொண்டிருந்த நபரை சுட்டு விட்டு, தப்பிச் செல்வதற்கு முயன்றுள்ளார்.

இதன்போது, துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபர் மற்றும் அவரது மனைவி, துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபருடன் சண்டையிட்டுள்ளனர். இதனால் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். எனினும் காயமடைந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய குறித்த நபர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து பத்தேகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, துப்பாக்கி சூட்டினை மேற்கொண்ட சந்தேக நபர் கைபேசி மற்றும் துப்பாக்கியினை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like