சுமாத்திரா தீவில் நில அதிர்வு – இலங்கையில் சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேஷியா சுமாத்திரா தீவில், இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகின்றது.

நில அதிர்வை அடுத்து இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், வானிலை அவதான நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Indonesia earthquake: 6.4 magnitude quake jolts Sumatra

இதுவொரு எச்சரிக்கை மாத்திரமே. சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம். மக்கள் குழப்பமடையத் தேவையில்லை என்று இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

சுமத்ரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை அல்லது புயல்காற்று வீசும் சந்தர்ப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் போது இடையிடையே கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெறக்கூடும் என்பதனால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

You might also like