கல்குடா தொகுதி அபிவிருத்தி ஆரம்ப நிகழ்வு

கல்குடா தொகுதியில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது

கல்குடா தொகுதியில் முதலாம் கட்டமான 79 மில்லியன் ரூபா செலவில் 54 கிலோ மீற்றர் குடிதண்ணீர் வழங்களுக்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் முதன்மை அதிதியாக கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மையில் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like