இணைய பாதுகாப்பு மாதம் பிரகடனம்

லங்கா கணினி அவசர தீர்வு வழங்கல் அமையத்தின் ஊடாக இணைய பாதுகாப்பு மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு வேலைத்திட்டங்கள் சில இந்த மாதம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமையத்தின் பிரதான பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் 31 ஆம் திகதி சிறப்பு நிபுணர்களின் பங்களிப்புடன் சிறப்பு கருத்தரங்கு ஒன்று கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டார்.

You might also like