பிரதேச செயலக வாகனத்துடன் விபத்து – இருவர் காயம்

காரைதீவில், பிரதேச செயலக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த விபத்து காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் நடந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச செயலக வாகனம் சுற்றுவட்டத்தால் காரைதீவுக்குள் செல்ல முற்படுகையில் கல்முனைப் பக்கமிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வாகனத்துடன் மோதியது என்று கூறப்படுகிறது. .

காயமடைந்த இருவரும் காரைதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு பின்னர் மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like