முகநூலில் புதிய காணொலி வசதி அறிமுகம்

முகநூலானது புதிய காணொலி தள  வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதியின் ஊடாக நேரடி ஒளிபரப்புக்கள் மற்றும் முக்கிய காணொலிகள் என்பவற்றினை பார்த்து மகிழ முடியும்.

இந்த வசதியினை கைபேசிச் சாதனங்கள், கணினிகள் மற்றும் பேஸ்புக் தொலைக்காட்சி விண்ணப்பங்கள் என்பவற்றினுடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

விரைவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடியாகவும், பதிவு செய்தும் இந்த வசதியின் ஊடாக ஒளிபரப்பப்படவுள்ளது.

தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியானது விரைவில் ஏனைய நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

You might also like