ஆள்கடத்தலைத் தடுப்பதில்- இலங்கை முன்னிலையில்!!

Get real time updates directly on you device, subscribe now.

சட்­ட­வி­ரோத ஆள்­க­டத்­த­லுக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் நாடு­கள் வரி­சை­யில் இலங்கை முன்­னி­லை­யில் காணப்­ப­டு­கி­றது. வெளி­நாட்டு சேவை­கள்­ப­ணி­ய­கத்­தில் ஆள்­க­டத்­தல் நட­வ­டிக்­கை­யைத் தடுப்­ப­தற்­கெ­னச் சிறப்­புப் பிரி­வொன்­றும் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு வெளி­நாட்டு வேலை­வாய்ப்­புப் பிர­தி­ய­மைச்­சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்­துள்­ளார். இது குறித்து அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஆள்­க­டத்­த­லைத் தடுப்­ப­தில் இலங்கை முன்­னி­லை­யில் உள்­ள­மையை அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளம் பாராட்­டி­யுள்­ளது. அமெ­ரிக்க இரா­ஜாங்­கத் திணைக்­க­ளம் வெளி­யிட்­டுள்ள ஆள்­க­டத்­தல் தொடர்­பான நட­வ­டிக்­கை­யின் புதிய அறிக்­கைக்கு அமைய இலங்கை இரண்­டாம் இடத்­தில் காணப்­ப­டு­கின்­றது.

ஆள்­க­டத்­த­லுக்கு எதி­ராக வெளி­நாட்­டுச் சேவை­கள் பணி­ய­கம் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்­தும் அந்த அறிக்­கை­யில் பாராட்­டப்­பட்­டுள்­ளது. இது பன்­னாட்டு ரீதி­யில் இலங்­கைக்கு உத­வி­யைப் பெற்­றுக் கொள்­வ­தற்­குப் பய­னுள்ள நில­மையே.

இலங்கை ஆள்­க­டத்­த­லுக்கு எதி­ராக முறை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்­கா­கச் செயற்­பாட்­டுப் படை­ய­ணி­யொன்று அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

வெளி­நாட்டு சேவை­கள் பணி­ய­கத்­தில் ஆள்­க­டத்­தல் நட­வ­டிக்­கை­யைத் தடுப்­ப­தற்­கான பிரி­வுக்­குக் கிடைக்­கும் முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­வ­தற்­கா­கக் குற்­றப்­பு­ல­ னாய்­வுத் திணைக்­க­ளத்­தி­டம் அவை சமர்ப்­பிக்­கப்­ப­டும்.

இது குறித்­துப் பொது­மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது – என்று மனுஷ நாண­யக்­கார மேலும் தெரி­வித்­தார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of