‘பிள்­ளை­களே பெற்­றோரை பரா­ம­ரிக்க வேண்­டும்’ -கைதடி முதி­யோர் இல்­லத்­தில் முன்­மா­தி­ரி­யான செயற்­பாடு!!

Get real time updates directly on you device, subscribe now.

‘பிள்­ளை­களே, தமது பெற்­றோ­ரைப் பரா­ம­ரிக்க வேண்­டும்’ என்ற தொனிப்­பொ­ரு­ளில் யாழ். வட­ம­ராட்சி மத்­திய மக­ளிர் கல்­லூ­ரி­யில் சிறு­வர் நாடா­ளு­மன்­றத்­தைச் சேர்ந்த 150 வரை­யி­லான மாண­வர்­கள் யாழ்ப்­பா­ணம் கைதடி முதி­யோர் இல்­லத்­துக்­குச் சென்று பல்­வேறு செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­னர்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற இந்த நிகழ்­வில் பாட­சாலை மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், பெற்­றோர் இணைந்து பல்­வேறு வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­னர். காலை­யில் முதி­யோர் இல்ல வளா­கத்தைத் துப்பு­ரவு செய்­த­னர். இய­லாத முதி­ய­வர்­க ­ளுக்கு உத­வி­கள் செய்­த­னர்.

தொடர்ந்து முதி­யோர்­க­ளு­டன் கலந்­து­ரை­யா­டி­ய­து­டன், முதி­யோர்­களை மகிழ்­விக்­கும் முக­மாக முதி­யோர் இல்­லத்­தின் திறந்­த­வெளி அரங்­கில் சிறப்பு க் கலை நிகழ்­வு­க­ளி­லும் மாண­வர்­கள் ஈடு­பட்­ட­னர். இவ்­வா­றான செயற்­பா­டு­களை எமது சமு­தா­யத்­தி­ன­ரும் பின்­பற்ற முன்­வர வேண்­டும் என இல்ல அத்­தி­யட்­ச­கர் கேட்­டுக்­கொண்­டார்.

You might also like

முகப்புக்குச் செல்ல

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of