Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

IOS ஜிமெயிலில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைத் தொடர்ந்து ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திலும் Anti-Phishing Security Checks வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஜிமெயில் செயலியில் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற தளங்களில் நுழைவதைத் தவிர்க்க முடியும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் அறிமுகமான இந்த வசதி தற்போது ஐ.ஓ.எஸ் தளத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐபோன் மற்றும் ஐபாட் மூலம் ஜிமெயில் செயலியை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது மால்வேர் அடங்கியுள்ள தளங்களில் நுழைய முற்பட்டால் எச்சரிக்கை செய்யும்.

இதேபோன்று கணனியில் குரோம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட Safe Browsing அம்சம் இந்தமுறை ஐ.ஓ.எஸ் தளத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.