தொழிற்பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கோரல்

காரை­ந­கர் தொழிற்­ப­யிற்சி நிலை­யத்­தால்­அ­டிப்­ப­டைக் கணினி பிர­யோ­கம், வெளி­யி­ணைப்பு இயந்­தி­ரம் திருத்­து­னர் ஆகிய தொழிற்­ப­யிற்­சி­க­ளுக்கு விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டுள்­ளன.

தொழிற்­ப­யிற்­சி­க­ளைக் கற்க விரும்­பு­வோர் தொழிற்­ப­யிற்சி நிலை­யத்­தில் பதிவு செய்­யு­மாறு நிலைய முகா­மை­யா­ளர் வே.ஸ்ரீ கு­கன் அறி­வித்­தார்.

இந்த நிலையில், கைதடி தொழிற்­ப­யிற்சி நிலை­யத்தினாலும் பகு­தி­நேர தொழிற்­ப­யிற்­சி­க­ளுக்கு விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டுள்­ளன.

மின்­னி­ணைப்­பா­ளர், டீசல் வாகன இயந்­திர திருத்­து­னர், குளி­ரூட்டி மற்­றும் வளிச்­சீ­ராக்கி திருத்­து­னர் ஆகிய கற்­கை­நெ­றி­க­ளைக் கற்க விரும்­பு­ப­வர்­கள் தங்­கள் பதி­வு­களை அலு­வ­லக நேரத்­தில் மாவட்ட அலு­வ­ல­கம் 1ஆம் மாடி, வீர­சிங்­கம் மண்­ட­பம், இல.12, கே.கே.எஸ்­வீதி, யாழ்ப்­பா­ணம் (021 222 7949) அல்­லது கைதடி ஏ9 வீதி­யில் உள்ள கைதடி தொழிற்­ப­யிற்சி நிலை­யத்­தில் எதிர்­வ­ரும் 19ஆம் திக­திக்கு முன்­னர் மேற்­கொள்­ளு­மாறு தொழிற்­ப­யிற்சி அதி­கார சபை­யின் உத­விப்­ப­ணிப்­பா­ளர் கு.நிரஞ்­சன் தெரி­வித்­தார்.

You might also like