சிக்கலுக்குள் மாட்டியுள்ளது கூட்டு எதிரணி

என் மீதும், எனது மனச்­சாட்­சி­யின் மீதும் நம்­பிக்கை வையுங்­கள் என வேண்­டிக் கொள்­கி­றேன். நான் பிர­புக்­கள், கோடீஸ்­வ­ரர்­கள் குடும்­பத்­த­வ­னல்ல, விரி­வு­ரை­ யா­ளரோ, பேரா­சி­யரோ அல்ல. இந்த நாட்­டின் விவ­சாயி ஒரு­வ­ரது மகன். நான் நீண்ட கால­மாக அர­சி­ய­ல­ரங்­கில் செயற்­பட்டு வரும் ஒரு­வன்.

நான் எனது குடும்ப உறுப்­பி­னர்­கள் ஐந்­து­பே­ரி­னது உயிர்­க­ளைப் பண­யம் வைத்தே அர­சி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளேன். இந்த அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் பல சவால்­களை எதிர்­நோக்க நேரும் என்­பதை நான் நன்­க­றி­வேன். பொது வேட் பா­ள­ரா­கத் தெரி­வாகி 12 மணித்­தி­யா­லங்­கள் கழி­யு­முன் எனக்­கான பாது­காப்பு நீக்­கப்­பட்டு விட் டது. நான் எனது பாது­காப்பை மக்­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கி­றேன்.’’

இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர், இன்­றைய அரச தலை­வர், ஐ.தே.கட்­சித் தலை­மை­ய­க­மான சிறி­கோத்­தா­வில் வைத்­துத் தெரி­வித்த கருத்தே மேற்­கண்­ட­தா­கும். 1952 ஆம் ஆண்டு முதல் இரண்டு தரப்­புக்­க­ளா­கப் பிரிந்து மோதிக்­கொண்ட இரு முதன்மைக் கட்­சி­க­ளை­யும் ஒன்­றி­ணைக்­கும் முனைப்­பி­லும், எதேச்­சா­தி­கா­ரப் பய­ணம் மேற்­கொண்ட முன்­னைய ஆட்­சித்­த­லை­வரை வீட்­டுக்கு அனுப்­பும் முர­ச­றை­ வா­க­வும் அவ­ரது மேற்­கு­றித்த கருத்து வெளிப்­பாடு அமைந்­த­தெ­ன­லாம்.

சுதந்­தி­ரக்­கட்­சிக்­காக இராப் ப­கல்­பா­ராது உழைத்த மனி­தர்; கட்­சிச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­ட­தன் கார­ண­மாக க.பொ.த உயர்­த­ரப்­ப­ரீட்சை எழுத கைவி­லங்­கு­டன் பரீட்­சை­மண்­ட­பத்­துக்கு அழைத்­துச் செல்­லப்­பட்ட மனி­தர்; காலில் செருப்­பில்­லா­மல் வெறுங்­கா­லு­டன் கட்­சிப்­ப­ரப்­பு­ரைக்­காக ஊரூ­ரா­கத் திரிந்த மனி­தர்; சிறிய பத­வி­யொன்­று­டன் ஆரம்­பித்து அர­சி­ய­லில் சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் பத­வி­வரை பய­ணித்த மனி­தர் என்ற வகை­யில் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கடை­சி­யில் கட்­சி­யின் எதேச்­சா­தி­கார தலை­மைத்­து­வத்­துக்கு எதி­ராக அரச தலை­வர் தேர்­த­லில் பொது வேட்­பா­ள­ராக போட்­டி­யிட நேர்ந்­தது.

மகிந்­தவை எதிர்க்­க துணிந்து
புறப்­பட்டார் மைத்­தி­ரி­பால

மகிந்­த­வின் மடத்­த­ன­மான நிர்­வா­கத்தை மாற்­றி­ய­மைக்­கும் தேவையே மைத்­தி­ரிக்கு இருந்­தது. எதேச்­சா­தி­கார, ஊழல்­கள் மலிந்த ஏமாற்று நிர்­வா­கத்தை மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யி­ருந்­தது. மகிந்­த­வின் அர­சுக்கு எதி­ராக எவ­ருமே வாய் திறக்க இய­லா­தி­ருந்த ஒரு கால­கட்­டத்­தில், இந்­தச் சிறிய மனி­தர் மேற்­கொண்ட அந்த முடிவு துணிச்­சல் மிக்­க­தொன்றே.

அந்த வகை­யில் நாட்­டில் நில­விய ஊழல் மோச­டி­கள், அச்­சு­றுத்­தல்­கள், எதேச்­சா­தி­கா­ரப் போக்கு, நீதி மறுக்­கப்­பட்ட நிலை ஆகிய தவ­றான செயற்­பா­டு­களை நிறுத்துவேன் என்ற வாக்­கு­றுதி வழங்­கியே மைத்­தி­ரி­பால அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்­டார்.

கூட்­டு­அ­ரசு நிர்­வா­கத்­தைப் பொறுப்­பேற்­ற­வேளை, நூறு நாள்­கள் வேலைத் திட்­டம் குறித்து மீளாய்வு செய்து பார்த்­த­போது மைத்­தி­ரி­பால, அர­சுத் தலை­வ­ருக்­கான பிரி­வு­க­ளின் வேலைத்­திட்­டங்­களை நிறைவு செய்­தி­ருந்­தார். அமைச் சர்­க­ளுக்­கு­கென ஒதுக்­கப்­பட்ட வேலைத்­திட்­டங்­களே பூர்த்­தி­ யா­காத நிலை­யில் இருந்­தன.

“எங்கே, திரு­டர்­க­ளைப் பிடித்து விட்­டீர்­களா?”
“பொய் கூறியே பத­விக்கு வந்த அரசு இது”
“மகிந்த தரப்­பி­லல்ல, திரு­டர்­கள் அர­சுக்­குள்­தான் இருக்­கி­றார்­கள்,”
என்­றெல்­லாம் பொது­மக்­கள் கூட்டு அரசை விமர்­சிக்­கத் தொடங்­கி­னார்­கள்.

‘‘அமைச்­சரே, இந்த அர­சுக்கு எங்கு தவறு நேர்ந்­தது?’’ என்று வார இறுதி அர­சி­யல் விவா­தங்­க­ளில் பங்­கேற்­கும் அமைச்­சர்­க­ளி­டம் வினா­வி­னால் அவர்­களோ, ‘‘எங்­க­ளால் திரு­ட­ர் க­ளைப் பிடிக்க இய­லாது போய்­விட்­டது’’ என்று ஒரே குர­லில் கூறு­கி­றார்­கள். ‘‘அதற்­காக நாங்­கள் நாட்டு மக்­க­ளி­டம் மன்­னிப்­புக் கோரு­கின்­றோம். எங்­க­ளால் ஒரு பெரிய திரு­ட­னைக் கூடப் பிடிக்க இய­லா­மல் போய்­விட்­டது’’ என மூக்­கால் அழு­கி­றார்­கள்.

இருந்­த­போ­தி­லும், இந்­தக் கூட்டு அர­சுக்­குள்­ளும் திரு­டர் கள் இருக்­கக்­கூ­டும் தானே?’’ என்று ஊட­கங்­கள் கதை­விட்­டால், ‘‘இந்த அர­சுக்­குள்­ளும் திரு­டர்­கள் இருக்­கத்­தான் செய்­கி­றார்­கள்’’ என்று இழுக்­கும் அமைச்­சர்­கள், ‘‘முன்­னைய அர­ சின் முன்­னாள் திரு­டர்­கள் விடு­தலை செய்­யப்­பட, அங்கு இங்­கென்று இருக்­கும் நபர்­க­ளும் எப்­ப­டி­யும் விடு­த­லை­யா­ வார்­கள் தானே அமைச்­சரே ?’’ என்று கேள்­வி­யெ­ழுப்­பி­னால், ‘‘அது உண்­மை­யில் பெரிய பிரச்­சி­னை­தான், எங்கோ ஓரி­டத்­தில் இதற்­கான “டீல்” ஒன்று இருக்­கி­றது தான்’’ என்­கி­றார்­கள்.
இத்­த­கைய விதத்­தில் இரண்டு ஆண்­டு­கள் நிறை­வில் கூட்டு அர­சின் மானம் கப்­பல் ஏறி­யுள்­ளது.

நம்­பத்­தன்­மை­யற்ற
ஐ.தே.கட்­சித் தரப்பு

“வெளித் திரு­டர்­களை விட உள்­ள­கத் திரு­டர்­களே நிறைந் தி­ருக்­கி­றார்­கள். இத்­த­கைய குத்­திக் காட்­டல்­க­ளால் மைத்­தி­ரி­பா­ல­வுக்கே மனக் கஷ்­டம். இரண்டு முதன்மைக் கட்­சி­கள் இணைந்த கூட்டு அர­சா­ன­போ­தி­லும் அவற்­றில் ஐ.தே.கட்­சியே பலம் வாய்ந்ததாய் இருக்­கின்­றது.

முக்­கிய அமைச்­சுக்­க­ளைத் தம்­வ­சம் கொண்­டுள்­ளோர் ஐ.தே.கட்­சி­யி­னரே. முக்­கி­ய­மான அழுத்­தம் கொடுக்­கும் தரப்­பி­னர்­கள் ஐ.தே.கட்சி தரப்­பி­லேயே இருந்­துள்­ள­னர்.கடை­சி­யில் மிகப்­பெ­ரும் குற்­றச்­சாட்­டுக்கு உட்­பட்­டோ­ரும் ஐ.தே. கட்­சி­ யி­னரே.

‘‘அரசு கவிழ நேரு­மா­னால் கூட ஐ.தேகட்­சிக்­குப் பிரச்­சினை எது­வும் வரப்­போ­வ­தில்லை. அவர்­க­ளுக்கு மகிந்­த­வு­டன் கொடுக்­கல் வாங்­கல் தொடர்பு உள்­ளது. ஆனால் எனக்­குச் சிக்­கல் சிக்­கல்­தான்’’. முக்­கி­ய­மான அரச தரப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­ட­னான சந்­திப்­பின் போது மைத்­தி­ரி­பால இவ்­வி­தம் தெரி­வித்­தார் எனப் பேச்சு அடி­ப­டு­கி­றது.

கூட்டு அர­சின் பய­ணம், நாளுக்கு நாள் காட்­டுப் பாதை­யில் தொடர நேர்ந்­துள்­ள­தால், சிர­மத்­துக்­கும் கவ­லைக்­கும் உள்­ளா­ன­வர் மைத்­தி­ரி­பா­லவே. ஏனெ­னில் இது அவர் உயி­ரைக் கொடுத்து உரு­வாக்­கிய அரசு என்­ப­தா­லா­கும். இன்­ன­மும் பல ஆண்­டு­கள் கலங்­க­லற்ற நீரோட் ட­மாய் பய­ணிக்­கும் வாய்ப்­பைக் கொண்­டி­ருந்த மகிந்­த­வி­னது அர­சைக் கவிழ்ந்­த­வர், மைத்­தி­ரி­பா­லவே.

கிரா­ம­மட்ட ஐ.தே.கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு புதிய அர­சொன்று உரு­வாக்க இருந்த சிர­மம்­கூட, கட்­சி­யின் பெரிய தலை­க­ளுக்கு இருந்­த­தில்ல. மகிந்த தரப்­பி­னர்­க­ளுக்கு ரணி­லு­டன் எந்­த­வி­தக் கோப­மும் கிடை­யாது. மைத்­தி­ரி­யின் மீது தான் அவர்­க­ளுக்கு ஆத்­தி­ரம்.

”பொலிஸ் திணைக்­க­ளத்­தை­யும் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தை­யும் மூன்று மாதங்­க­ளுக்கு நிர்­வ­கிக்க என்­னி­டம் தந்து பாருங்­கள். நான் வேலையை எப்­படி நிறை­வேற்­றிக் காட்­டு­கி­றேன் என்­பதை இருந்து பாருங்கள்’’
கடை­சி­யில் பொறுமை காக்க இய­லாத நிலை­யில் மைத்­தி­ரி­பால இப்­ப­டிச் சவால் விட்­டார்.

பிணை­முறி ஊழல்
விவ­கா­ரமே அர­சின்
மதிப்­பைக் கெடுத்­தது

உண்­மை­யில் இந்­தக் கூட்டு அரசு மதிப்­புக் கெட­நேர்ந்­தது மத்­திய வங்­கி­யின் பிணை­முறி ஊழல் கார­ண­மா­கவே.
மத்­திய வங்­கிப் பிணை­முறி ஊழல் தொடர்­பான அர­சுத் தலை­வர் ஆணைக்­கு­ழு­வின் செயற்­பாடு, லஞ்ச ஊழல் குறித்த விசா­ரணை மற்­றும் தண்­டனை வழங்­கல் தொடர்­பான அரச தலை­வ­ரது செயற்­பா­டு­கள் அள­வுக்கு சிறப்­பாக அமைந்­தி­ருந்­தது.

அரசு நேர்­மை­யா­ன­தொன்­றா­னால் ரவி கரு­ணா­நா­ய­காவை அவ­ரது அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்கி விட­வேண்­டும். அதன் பின்­னரே விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­க­வேண்­டும். அவர் குற்­ற­வா­ளி­யா­கவோ சுற்­ற­வா­ளி­யா­கவோ இருக்­கட்­டும். அர­சின் ஒரு அங்­க­மாக அவர் செயற்­ப­டு­வதே அவரை அவ­ரது பத­வி­லி­ருந்து நீ்க் குமாறு நாம் கோரு­வ­தற்­கான கார­ண­மா­கும் என ஜே.வி.பி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுனில் ஹந்­துன்­நெத்தி பி.பி.சிக்­குத் தெரி­வித்­தி­ருந்­தார்.

கடை­சி­யில் வெளி­யு­றவு அமைச்­சர் பத­வியை வகித்த ரவி கரு­ணா­நா­யகா தாமா­கத் தமது பத­வி­யி­லி­ருந்து வில­கிக் கொண்­டார். நாலா­பக்­கங்­க­ளி­லி­ருந்து கிளம்­பிய கடும் விமர்­ச­னங்­களே அதற்­குக் கார­ண­மா­யின. அர­சின் மத்­தி­யில் ரவி­க­ரு­ணா­நா­யக அதி­கா­ரம் படைத்­த­வா­ரா­யி­ருந்­தார்.

நல்­ல­துக்கோ கெட்­ட­துக்கோ தெரி­யாது அந்த அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவர் சிற்­சில விடங்­களை நிறை­வேற்­றிக் கொண்­டார். நிதி அமைச்­சுப் பத­வி­யி­லி­ருந்து அயலுறவுத்துறை அமைச்­சுப் பதவி கிட்­டி­ய­போது கூட, சிறப்­புப் பரிசு என்ற விதத்­தில் அவ­ருக்­குத் தேசிய லொத்­தர்­ச­பை­யின் பொறுப்­பும் கிடைத்­தது. அந்த வகை­யில் அவர் அர­சில் அழுத்­தம் கொடுக்­க­வல்ல வர­லாற்று நப­ரா­கத் திகழ்ந்­தார்.அதே­வேளை தற் போது அர­சுக்­குப் புதிய போராட்­டக் கோச­மொன்று கிடைத்­துள்­ளது.

கிட்­டிய வாய்ப்­பைப் பயன்­ப­டுத்த
வியூ­கம் வகுத்த அரச தரப்பு

‘‘நாம் திரு­டர்­க­ளைக் கைது செய்­யும் விட­யத்­தில் பத­விக்கோ அந்­தஸ்­துக்கோ மதிப்­ப­ளிப்­ப­தில்லை. ஊழல் மேற்­கொள்­ளும் எவ­ரை­யும் சட்­டத்­தின் பிடிக்­குள் கொண்­டு­வ­ரு­வோம்’’ என்­பதே அர­சுக்­குக் கிட்­டி­யுள்ள அந்த வாய்ப்பு.

‘‘நாட்­டில் இடம்­பெற்­று­வந்த ஊழல் செயற்­பா­டு­க­ளைத் தடுத்து நிறுத்­து­வது மட்­டு­மல்­லாது கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக நாட்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளைப் போன்று பத்து மடங்கு அபி­வி­ருத்­தியை மேற்­கொள்­வேன்’’ என மைத்­தி­ரி­பா­ல­வின் அர­ச­த­லை­வ­ருக்­கான தேர்­தல் விஞ்­ஞா­ப­னத்­தில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதனை நடை­மு­றைப்­ப­டுத்த அரசுத் தலை­வர் மைத்­தி­ரி­பால நட­வ­டிக்கை எடுத்­தி­ருந்த போதி­லும், நாளை அந்த அள­வுக்கு இருள் இருக்­காது. எது எப்­ப­டியோ அரசு தற்­போது திட­மான மாற்­ற­மொன்­றில் பிர­வே­சித்­துள்­ளது. அது, முத­லில் தமது வீட்­டைச் சுத்­தப்­ப­டுத்­திக் கொள்­ளும் வேலை­யி­லி­ருந்து ஆரம்­பிப்­ப­தா­கும். தற்­போது அச்­ச­மின்றி ஏனைய இடங்­க­ளை­யும் சுத்­தப்­ப­டுத்த இய­லும்.

‘‘திரு­டர்­க­ளுக்கு எதி­ராக நேரடி நட­வ­டிக்கை எடுப்­ப­தில் நாம் திட­மாக உள்­ளோம் என்­ப­தற்கு உதா­ர­ணம் காட்­டி­யுள்­ளோம்’’ எனக் கூறும் அரச தரப்­பி­னர்­கள், “நாம் எங்­கள் தரப்­பி­லி­ருந்து வேலையை ஆரம்­பித்­துள்­ளோம். முன்­னாள் திரு­டர்­களே, ஜாக்­கி­ர­தை­யாக இருங்­கள்’’ என்ற செய்­தி­யை­யும் விடுத்­துள்­ள­னர்.

திரு­டர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­யே­தும் மேற்­கொள்­ளாது தூக்­கக் கலக்­கத்­தில் அரசு ஆழ்ந்­தி­ருந்­த­போது கூட்டு எதி­ர­ணி­யி­னர் மகிழ்ச்­சி­யான நிலைப்­பாட் டில் வலம் வந்­தார்­கள். சமீபகாலமாக அவர்­கள் அதே மன­நி­லை­யில் இருந்து வந்­துள்­ள­னர்.

ஆனால் தற்­போது அவர்­கள் மௌன­மா­கி­யுள்­ள­னர். முன்­னைய அரசு காலத்து ஊழல் செயற்­பா­டு­கள் குறித்து, இன்­றைய கூட்டு அரசு எத்­த­கைய அதி­ரடி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளப் போகி­றது எனத் தெரிந்துகொள்ள இய­லா­த­தால் அவர்­கள் தற்­போது குழம்­பிப்­போய்க் காணப்­ப­டு­கின்­ற­னர்.

பசில் ராஜ­பக்ச, விமல் வீர­வன்ச, நாமல், யோசித தரப்­பி­னர்­கள் விசா­ர­ணைக்கென அழைக்­கப்­பட்­ட­போது கூட்டு அரசு தம்­மைப்­ப­ழி­வாங்க முயல்­வ­தா­கக் குற்­றம் சாட்டி வந்­தார்­கள். தற்­போது அரசு தன­து­ அயலுற வுத்துறை அமைச்­ச­ரி­லி­ருந்தே தனது நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­துள் ளது.

அந்த வகை­யில் பார்க்­கும்­போது கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னர் தற்­போது பெரும் சிக்­க­லில் மாட்­டுப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் வச­மி­ருந்த பெரிய போராட்­டக் கோசம் தற்­போது அர­சின் கைக­ளுக்கு மாறி­யுள்­ளது.
கூட்டு அரசு இன்று கவி­ழும்; நாளை கவி­ழும் என நம்­பிக்­கொண்­டி­ருந்த அவர்­கள், அந்த எண்­ணத்தை மேலும் சில ஆண்­டு­க­ளுக்­குத் தள்­ளிப் போகும் நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ள­மையே இலங்கை அர­சி­ய­ல­ரங்­கின் இன்­றைய யதார்த்த நிலை­யா­கி­ யுள்­ளது.

சிங்­கள மூலம்: மவ்­பிம
தமி­ழில் : வீஎஸ் ரீ

You might also like