கிராம மக்களை அச்சுறுத்திவரும் யானை

மட்டக்களப்பு – பதுளை வீதியில் உள்ள சர்வோதய நகர் கிராமத்தின் வளவுக்குள் யானையொன்று புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளதுடன், மக்களையும் விரட்டியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக இந்த யானை பிரச்சினை தொடர்பாக பலரிடமும் முறைப்பாடு செய்து வந்த போதும் இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை அயல் கிராமங்களில் அண்மைக்காலமாக யானைகள் மூலம் பல உயிர் சேதங்களும் இடம்பெறுள்ளமை குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like