இன்றைய மோதல்கள்

சரஸ்­வதி ச.ச.நி.
தாச்­சித் தொடர்

நாவற்­குழி சரஸ்­வதி சன­ச­மூக நிலை­ய­மும், விளை­யாட்­டுக் கழ­க­மும் இணைந்து யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­தும் தாச்­சித் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில்
இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று வியா­ழக்­கி­ழமை இரவு 7.15 மணிக்கு இடம்­பெ­றும் அரை­யிறுதி ஆட்­டத்­தில் உடு­வில் ஆலடி சிந்து விளை­யாட்­டுக் கழக ‘ஏ’ அணியை எதிர்த்து புது­ம­டம் வைகறை விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

சக்­தி­வேல் வி.க.
துடுப்­பாட்­டம்

கொடுக்­கு­ளாய் சத்­தி­வேல் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் 10 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளைக் கொண்ட மென்­பந்து துடுப்­பாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று வியா­ழக்­கி­ழமை காலை 8.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் செல்வா அணியை எதிர்த்து கணே­சா­னந்தா
‘பி’ அணி மோத­வுள்­ளது.

முற்­ப­கல் 12.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சம்­பி­யன் அணியை எதிர்த்­து றம்போ அணி மோத­வுள்­ளது. பிற்­ப­கல் 1.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் இளம்­பிறை அணியை எதிர்த்­து வெள்ளி நிலா ‘பி’ அணி மோத­வுள்­ளது. பிற்­ப­கல் 2.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சென். மேரிஸ் அணியை எதிர்த்­து கணே­சா­னந்தா ‘ஏ’ அணி மோத­வுள்­ளது. பிற்­ப­கல் 3.30 மணிக்கு இடம் பெ­றும் ஆட்­டத்­தில் உத­ய­சூ­ரி­யன் அணியை எதிர்த்து பாரதி அணி மோதவுள்ளது.

You might also like