ஒரே பிரசவத்தில் 3 சிசுக்கள் பிறப்பு

தியத்தலாவ வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 3 சிசுக்களைப் பிரசவித்துள்ளார்.

3 சிசுக்களும் நேற்று மாலை பிரசவிக்கப்பட்டன என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று சிசுக்களும் பெண் குழந்தைகள் எனவும், அவை ஆரோக்கியமான நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21 வயதான சந்திரிக்கா தர்ஷினி என்பவருக்கே 3 சிசுக்கள் பிறந்துள்ளன.

You might also like