பன்னாட்டு இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஓகஸ்டில்

இலங்கை இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணச் சங்கம் ஏற்பாடு

2017 ஆம் ஆண்­டுக்­கான பன்­னாட்டு இரத்­தி­னக்­கற்­கள் மற்­றும் ஆப­ர­ணங்­க­ளின் கண்­காட்சி (குயு­ஊ­நு­வுளு) நிகழ்­வு­கள் எதிர்­வ­ரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி தொடக்­கம் எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதம் 03ஆம் திகதி வரை நடை­பெற உள்­ளது.

பன்­னாட்­டுப் பங்­க­ளிப்­பு­டன் இலங்கை இரத்­தின கற்­கள் மற்­றும் ஆப­ரணச் சங்­கம் ஏற்­பாடு செய்­துள்ள இந்தக் கண்­காட்சி நிகழ்­வில் இலங்­கை­யின் மிகப்­பெ­று­ம­தி­யான வளங்­க­ளில் அதி உயர்ந்­தவை குறிப்­பாக , இரத்­தின கற்­கள் முதல் ஆப­ர­ணங்­கள் வரை சிறந்த வர்த்­தக நாமங்­களை கொண்­ட­தான கைக்­க­டி­கா­ரங்­கள், நவ­நா­க­ரிக ஆப­ர­ணங்­கள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­ன. அதி­க­ள­வான விற்­ப­னைக் கூடங்­கள் அமைக்­கப்­ப­டும் என்­ப­தான தக­வலும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும் இவ் வரு­டம் இடம்­பெ­ற­வுள்­ள­தான மேற்­படி கண்­காட்சி நிகழ்­வில் உல­கம் முழு­வ­தும் இருந்து பெருந்­தொ­கை­யா­னோர் கலந்­துக் கொள்­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

You might also like