நடப்பாண்டில் அதிகளவு இலாபத்தை பதிவு செய்தது பி.பி நிறுவனம்

மாற்றுச் செலவு நடவடிக்கை மீது 1.4 பில்லியன் லாபம்

எண்­ணெய் விலை­க­ளின் அண்­மைய அதி­க­ரிப்­பா­னது நடப்­பாண்­டின் முதல் மூன்று மாத காலப்­ப­கு­தி­யி­லும் பெற்­றோ­லிய தொழில்­துறை நிறு­வ­ன­மான பி.பி (BP) இற்கு அதி­க­ள­வி­லான இலா­பத்தை பெற்­றுக் கொடுத்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக மாற்­றுச் செலவு நட­வ­டிக்கை மீது 1.4 பில்­லி­யன் லாபம் கிடைக்­க ப்­பெற்­றுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கின்­றது.

கடந்த 2015 ஆம் ஆண்­டு­டன் ஒப்­பிட்டு நோக்­கு­கை­யில் 2017 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்­க­ளி­லும் எண்­ணெய் விலை நிர்­ண­ய­மா­னது 35 சத­வீத அதி­க­ரிப்பை காட்­டி­யுள்­ள­து­டன் பெற்­றோ­லிய தொழில்­துறை நிறு­வ­னத்­திற்கு எண்­ணெய் மற்­றும் எரி­வாயு உற்­பத்­தி­யின் வரு­மான உள்­ளீ­டு­கள் மீதான அதி­க­ரித்த பதிவை வெளிக்­காட்­டி­யுள்­ளது.

இது குறித்து கருத்­து­ரைத்­துள்ள நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி பொப் டட்லி,
“இந்த ஆண்டு மிக­வும் சிறப்­பான ஆண்­டாக ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. எங்­க­ளு­டைய திட்­டங்­க­ளுக்கு ஏற்ப ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்ட விநி­யோ­கங்­க­ளி­லேயே பி.பி நிறு­வ­னம் கவ­னம் செலுத்­து­கின்­றது. நடப்­பாண்­டின் முதல் காலாண்­டில் உள்­ளீ­டான வரு­மா­ன­மும் பணப்­பு­ழக்­க­மும் வலு­வா­ன­தாக உள்­ளது” – என்­றார்.

You might also like