சனச அபிவிருத்தி வங்கிக்கு வெள்ளி விருது

இலங்கை பட்­ட­யக் கணக்­கா­ளர் நிறு­வ­னத்­தி­னால் அண்­மை­யில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த வரு­டாந்த நிதி அறிக்­கை­க­ளுக்­கான விரு­து­கள் வழங்­கும் நிகழ்­வில் சனச அபி­வி­ருத்தி வங்கி நிதி நிறு­வ­னங்­கள் பிரி­வில் தங்­க­ளது 2015 ஆம் ஆண்­டுக்­கான நிதி அறிக்­கைக்கு வெள்ளி விரு­தினை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.

இதன்­படி வரு­டாந்த அறிக்­கை­க­ளுக்­கான கௌர­விப்பு மற்­றும் விருது வழங்­கல் என்­பது நிறு­வ­னத்­தின் பொறுப்­புக்­கூ­றல் மற்­றும் வெளிப்­ப­டைத்­தன்மை என்­ப­வற்றை கவ­னத்­தில் கொண்டு வழங்­கப்­பட்­டு­வ­ரு­கி­றது.

குறிப்­பாக விரி­வான முறை­யி­லும் கவர்ச்­சி­க­ர­மான வகை­யி­லும் தக­வல்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டமை, செயற்­றி­றன் மதிப்­பீடு மற்­றும் வெளிப்­ப­டைத்­தன்மை போன்­றன இம்­முறை வெற்­றி­யா­ளர் தெரி­வின் போது முக்­கிய விட­யங்­க­ளா­கக் கரு­தப்­பட்­ட­தாக சுட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.
இது­தொ­டர்­பில் கருத்­து­ரைத்­துள்ள சனச அபி­வி­ருத்தி வங்­கி­யின் பிரதி பொது முகா­மை­யா­ளர் ஹேமால் லொகு­கீ­கன,

“இம்­முறை வங்­கி­யின் வரு­டாந்த நிதி அறிக்கை இரண்­டா­வது தட­வை­யா­க­வும் சர்­வ­தேச குறி­யீட்­டுக்­கி ­ணங்க (புசுஐ) தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளமை விசேட அம்­ச­மா­கும்.இந்த அறிக்­கை­யின் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு பொருத்­த­மாக இலங்கை மத்­திய வங்­கி­யின் விதி­மு­றை­கள், பங்­குப்­ப­ரி­வர்த்­த­னை­யின் விதி­மு­றை­கள், கம்­ப­னி­கள் சட்­டத்­தின் வெவ்­வேறு உள்­ளடக்கங்களின் அடிப்­ப­டை­யிலே நிதி அறிக்­கைதயா­ரிக்­கப்­பட்­டுள்­ளமை அனை­வ­ரின் கவ­னத்­தை­யும் ஈர்த்­தி­ருந்­தது. மேற்­படி விவ­ரங்­க­ளுக்கு மேல­தி­க­மாக வங்கி 2015 ஆம் ஆண்டுக்்­கான செயற்­தி­றன் தொடர்­பில் தக­வல் பல­தைச் சாராம்­சப்­ப­டுத்­தித் தெளி­வாக சமர்ப்­பித்­தி­ருந்­த­மை­யால் நிதி அறிக்­கை­யா­னது பரி­பூ­ர­ண­மான வரு­டாந்த அறிக்­கை­யாக அமைந்­துள்­ளது. மேலும் முத­லீ­டு ­க­ளுக்­கா­கத் தக­வல்­கள் கவர்ச்­சி­க­ர­மா­ன­வை­யா­க­வும், முழு­மை ­யா­க­வும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இந்த விட­யங்­கள், வெள்ளி விருதை வென்­றெ­டுப்­ப­தற்கு உத­வி­யாக அமைந்­தி­ருந்­தது” – என்­றார்.

மேற்­படி போட்டி நிகழ்­வில் 140 நிறு­வ­னங்­கள் பங்­கேற்­றி­ருந்­த­து­டன் ஒரு அறிக்­கையை ஆகக்­கு­றைந்­தது ஐந்து கணக்­கி­ய­லா­ளர்­கள் மீளாய்வு செய்­தி­ருந்­த­னர்.
அளவு, தக­வல் மூலம் மற்­றும் செயல்­முறை போன்ற விட­யங்­கள் தொடர்­பில் ஆரா­யப்­பட்­டி­ருந்­தன. மேலும் இந்த விரு­து­கள் வழங்­கப்­ப­டும் போது நிறு­வ­னத்­தில் காணப்­ப­டும் நெறி­மு­றை­கள், பெற்­றுக்­கொண்ட வெற்­றி­கள் மற்­றும் நிறு­வ­னத்­தில் எதிர்­கால செயற்­பா­டு­கள் பற்­றி­ய­தாக காண்­பிக்­கப்­ப­டும் அக்­கறை போன்ற விட­யங்­க­ளும் கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like