கொமர்ஷல் கிரடிட் காட் வாடிக்கையாளர்களுக்கு அனுகூலம்

இலங்கையின் எந்­தப் பகு­தி­யாக இருந்­தா­லும் கொமர்­ஷல் வங்­கி­யின் கிர­டிட் காட்­டினை கொண்­டுள்ள வாடிக்கை யாளர்­கள் பிர­ப­ல­மான ஹோட்­டல்­க­ளில் 50 வீதம் வரை­யி­லான பணச் செலுத்­து­கைக் கழி­வு­டன் தங்­கியி ருக்­கும் வாய்ப்­புக்­களை கொமர்­ஷல் வங்கி ஏற்­ப­டுத்­திக் கொடுத்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதன்­பி­ர­கா­ரம் வங்­கி­யின் ‘ஈஸி வகே­ஷன்’ திட்­டத்­தின் தற்­போ­தைய அறி­விப்­பின் படி­யாக 24 ஹோட்­டல்­க­ளில் இந்­தக் கழி­வு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­து­டன் விஸா அல்­லது மாஸ்­டர்­காட் மூலம் கொடுப்­ப­ன­வு­க­ளைச் செய்­கின்ற போது இந்­தக் கழி­வு­கள் வழங்­கப்­ப­டுமெனவும் வங்கி அறி­வித்­துள்­ளது.
குறிப்பாக, ஏர்ள்ஸ் றீஜன்ட் கண்டி, பண்­ட­னஸ் பீச் றெசோர்ட் அன்ட் ஸ்பா, சூரியா றெசோர்ட்ஸ், சென்­டாரா சீசேன்ட் றெசோர்ட்ஸ் அன்ட் ஸ்பா, த ரெயின் பொரஸ்ட் எகோ­லொட்ஜ், சித்­தா­லேப ஆயுள்வேத ஹெல்த் றெசோர்ட் மற்­றும் ஆதித்யா ஹோட்டல்களில் மே மாதம் 31 ஆம் திகதி வரை இந்­தக் கழிவு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கக் கூறப்­படு கிறது.

ஏனைய 17 ஹோட்­டல்­க­ளி­லும் எதிர்­வ­ரும் ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரை இந்தக் கழிவு முறைமை நடை­மு­றை­யில் இருக்­கு­மெ­னச் சொல்­லப்­ப­டு­கி­றது. பிரதானமாக ஆலியா றெசோர்ட் அன்ட் ஸ்பா, அவானி பென்­தொட்டை, அவானி களுத்­துறை, கிளப் ஹோட்­டல் டொல்­பின், ஹோட்­டல் சீகி­ரிய, மாலு­மாலு, மவுண்ட் பேட்­டன் பங்­களா, திக்­வல்ல றெசொர்ட் அன்ட் ஸ்பா, த காம் றெசோர்ட் அன்ட் ஸ்பா, த ஈடன் றெசோர்ட் அன்ட் ஸ்பா, த பெர­டைஸ் றெசோர்ட் அன்ட ஸ்பா, ஊகா பே, ஊகா ஜன்­கிள் பீச், சீகி­ரிய ஜன்­கில்ஸ், த புளு வோட்­டர், சன் அக்­குவா, டறீ­ஒப் லைப் நேச்­சர் றிசோர்ட் என்­ப­னவே ஜுன் மாதம் 30 ஆம் திகதி வரை­யான கழிவு முறை­மைக்­குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளதாகக் கூறப்படுகின்றது.

You might also like