அருகம்புல் சாறு செய்வோம் வாங்க!!

தேவையான பொருட்கள்:

அருகம்புல் – 1 கட்டு
இஞ்சி – சிறிய துண்டு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை :

• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.

• அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.

• விரும்பினால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

You might also like