முதலை இழுத்துச் சென்றதில் முதியவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கரவெட்டி பகுதியில், முதலை இழுத்துச் சென்று உயி​ரிழந்த மீனவர் ஒருவரின் உடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விளாட்டுவானைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான அல்லி முத்து விக்கிரமசிங்க (வயது-62) என்பவரின் உடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினமிரவு 8.30 மணியளவில் வீட்டில் இருந்து சென்ற குறித்த நபரை இரவு 12 மணிவரை அப்பகுதியிலிருந்த ஏனைய மீனவர்கள் கண்டதாகவும், அதன் பின்னரே முதலை பிடித்துச் சென்றிருக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , வவுணதீவு பொலிஸாரால் உடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த உடலத்தை, பிரேதப் சோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like