மாயையைக் கண்டு மிரளும் மைத்திரி

உள்ளூராட்சிச் சபை தேர்தல் மேலும் தாமதம்

எதைச் செய்­தா­வது ஆட்­சி­யைத் தக்க வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்ற கட்­டா­யத்­துக்­குள் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளும்-, எதைச் செய்­தா­வது இந்த ஆட்­சி­யைக் கவிழ்க்க வேண்­டும் என்ற கட்­டா­யத்­துக்­குள் மகிந்த அணி­யி­ன­ரும் தள்­ளப்­பட்­டுள்­ளதை தற்­போ­தைய அர­சி­யல் செயற்­பா­டு­க­ளைப் பார்க்­கும்­போது தெளி­வாக அவ­தா­னிக்­க­லாம்.

ஊழல்,மோச­டி­களை ஒழிக் கப் போவ­தா­க­வும், நாட்­டின் பொரு­ளா­தா­ரத்­தைக் கட்டி எழுப்­பப் போவ­தா­க­வும், பூரண ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டப் போவ­தா­க­வும் வாக்­கு­று­தி­ய­ளித்து மகிந்­த­வி­ட­மி­ருந்து ஆட்­சி­யை தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­கள் கைப்பற்றினார்கள். ஆனால் அந்த வாக்­கு­று­தி­களை மீறி அவர்கள் பய­ணிக்­கத் தொடங்­கியுள்­ள­மை­யால் முன்­னாள் ஆட்­சி­யா­ளர்­கள் தங்­க­ளின் கறை­களை இந்த ஆட்­சி­யில் கழு­விக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

இந்த அரசு மேற்­கொள்­ளும் தவறான செயற்பாடு களால், மகிந்த ஆட்­சி­யில் இடம்­பெற்ற மோச­டி­கள்-, அநி­யா­யங்­கள், -ஜன­நா­யக விரோ­தச் செயற்­பா­டு­கள் யாவும் மக்­க­ளால் மறக்­கப்­ப­டும் ஓர் அபாய நிலை தோன்­றி­யுள்­ளது. தங்­களைச் சுற்­ற­வா­ளி­ க­ளா­க­வும், இந்த அர­சைக் குற்­ற­வா­ளி­யா­க­வும் காட்­டு­வ­தற்கு தங்­க­ளால் முடிந்த அனைத்­தை­யும் மகிந்த தரப்பு செய்­து­ கொண்­டி­ருக்­கின்­றது.

அர­சின் சிறிய தவ­று­களை பூதா­க­ர­மா­கக் காட்ட முய­லும்
மகிந்த தரப்பு

இந்த அரசு செய்­கின்ற சின்­னச் சின்­னத் தவ­று­கள் யாவும் மகிந்த தரப்­பால் பூதா­கா­ர­மாக்­கப்­பட்டு மக்­க­ளி­டம் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன.இதற்கு அப்­பால் என்­னென்ன யுக்­தி­க­ ளெல்­லாம் உள்­ள­னவோ, அவை அனைத்­தை­யும் பயன்­ப­டுத்தி ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வ­தற்கு மகிந்த அணி முற்­ப­டு­கின்­றது.

ஏதா­வது ஒரு தேர்­த­லில் எதிர்த் தரப்­புக்கு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி வைத்­தால், அது ஏனைய தேர்­தல்­க­ளி­லும் அந்தத் தரப்பில் தாக்­கம் செலுத்­தும் என்­பது யதார்த்­தம்.அந்த யதார்த்­தத்­துக்கு ஏற்ப மகிந்த அணி இப்­போது செயற்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது.

2020 இற்கு முன்­னர் நாடா­ ளு­மன்­றத் தேர்­தல் இடம்­பெற வாய்ப்பு இல்லை.ஆனால்,அதற்கு முன்னர், உள்­ளூ­ராட்சிச் சபைத் தேர்­த­லும், மாகாண சபைத் தேர்­த­ லும், இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் உள்­ளன.

உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லைப் பொறுத்­த­வரை தங்­க­ளது பக்­கமே வெற்றி வாய்ப்பு அதி­கம் என மகிந்த தரப்பு நம்­பிக் கொண்­டி­ருக்­கின்­றது.அதில் உண்மை இல்­லா­ம­லும் இல்லை.

உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தல் என்­பது கிராம மட்­டத்­தில் ஆட்­சி­யைப் பகிர்ந்து கொடுக்­கும்-, மத்­திய அர­சுக்கு உந்து சக்­தி­யாக இருக்­கும் தேர்­த­லா­கும்.அப்­ப­டி­யான ஒரு தேர்­த­லில் வெற்றி பெறும் தரப்பு, மத்­திய அர­சைக் கைப்­பற்­றக்­கூ­டிய வகை­யில் முன்­னேற்­ற­ம­டை­யும்.
பெறும்­பா­லான உள்­ளூ­ராட்­சிச் சபை­கள், மகிந்த நாமத்தை என்­றென்­றும் உச்­ச­ரிக்­கும் சிங்­க­ளக் கிரா­மங்­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்டே அமைந்­துள்­ளன. இந்­தத் தேர்­தல், அர­சால் தொடர்ச்­சி­யாக ஒத்­திப்­போ­டப்­ப­டு­வ­தற்­கும், மகிந்த அணி இந்தத் தேர்­த­லைக் கோரி நிற்­ப­தற்­கும் இந்த நிலை­மை­தான் கார­ணம்.

தவற விடாதீர்கள்:  குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு

உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளைக் கைப்­பற்­றி­னால் 2020 இல் இடம்­பெ­றப் போகும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் இல­கு­வாக வெற்றி பெற முடி­யும் என்று மகிந்த தரப்பு நம்­பு­கின்­றது.அர­சும் அவ்­வாறே நம்­பு­கி­றது.இத­னால்­தான் ஏதேதோ கார­ணங்­க­ளைக் கூறி, அரசு உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­தலை நடத்­தா­மல் இழுத்­த­டிக்­கின்­றது.

தேர்­தலை உடன் நடத்­து­வ­தற்குப் பல்­வேறு வகை­யி­லும் அர­சுக்கு அழுத்­தம் கொடுத்து வரும் மகிந்த அணி, இறு­தி­யா­கக் கொடுத்த மிகப் பெரிய அழுத்­தம்­தான், அந்த அணி­யின் மே தினக் கூட்­டம்.தேர்­தலை மேலும் இழுத்­த­டிக்­கா­மல் உடன் நடத்­தக் கோரும் மக்­க­ளின் போராட்­ட­மா­கவே மகிந்த அணி அந்த மே தினக் கூட்­டத்தை மாற்றி இருந்­தது.

உண்­மை­யில் மகிந்த அணி இம்முறை மே தினத்தை உரிய தரு­ணத்­தில் உரிய முறை­யில் பயன்­ப­டுத்தி இருக்­கின்­றது என்றே சொல்ல வேண்­டும்.

ஏனைய கட்­சி­களை விட­வும் குறிப்­பாக,மைத்­திரி தரப்பை விட­வும் மகிந்த அணிக்கே மக்­கள் செல்­வாக்கு அதி­கம் உண்டு என்று இந்த நாட்டு மக்­களை அவர்­கள் நம்ப வைத்­துள்­ள­னர்.நாட்டு மக்­களை மாத்­தி­ர­மன்­றிப் பிர­தான அர­சி­யல் கட்­சி­க­ளை­யும் அவ்விதம் நம்ப வைத்­துள்­ள­னர்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் மே தினக் கூட்­டம் இடம்­பெற்ற 2 ஏக்­கர் நிலப் பரப்­பில் நிறைந்து நின்ற மக்­களை விட­வும், மகிந்த அணி­யின் மே தினக் கூட்­டம் இடம்­பெற்ற 18 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் நிறைந்து நின்ற மக்­கள் கூட்­டம் விசா­ல­மா­ன­தா­கும்.அது மட்­டு­மல்­லாது, காலி முகத் திட­லைச் சூழ­வுள்ள வீதி­க­ளி­லும் மக்­கள் நிறைந்து நின்­ற­னர்.

இந்­தக் காட்­சி­யைக் கண்ட நாட்டு மக்­கள் மகிந்­த­வுக்கே அதிக பலம் இருப்­ப­தாக நம்­பத் தொடங்­கி­யுள்­ள­னர்.சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர்­கூட இதை மறுக்­க­வில்லை என்­பது அவர்­க­ளின் வார்த்­தை­க­ளில் இருந்து தெரி­கின்­றது.

தவற விடாதீர்கள்:  தமி­ழர்­கள் சிந்­திக்க வேண்­டிய தரு­ண­மிது

மகிந்த – மைத்­திரி அணி­கள் இணைய வேண்­டு­மென
வலி­யு­றுத்­தல்

மகிந்­த­வின் மே தினக் கூட்­டம் வெற்றி பெற­வு­மில்லை; தோல்­வி­ய­டை­ய­வு­மில்லை என்­கி­றார் அமைச்­சர் எஸ்.பி.திஸா­நா­யக.மைத்­திரி,-மகிந்த அணி­கள் ஒன்­றி­ணைய வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை மகிந்­த­வின் மே தினக் கூட்­டம் உணர்த்­து­கின்­றது என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இன்­னோர் அமைச்­சர் கூறு­கின்­றார், எல்­லாக் கட்­சி­க­ளின் கூட்­டங்­க­ளுக்­கும் அதி­க­மான மக்­கள் வந்­தி­ருந்­த­னர் என்று.இதன் மூலம் மகிந்த அணி­யின் கூட் டத்­தின் வெற்­றியை அவர்­கள் மறை­மு­க­மாக ஏற்­றுக்­கொள்­வ­தோடு, சுதந்­தி­ரக் கட்­சி­யின் கூட்­டத்­தில் குறை­வா­ன­வர்­களே கலந்­து­கொண்­ட­னர் என்­ப­தை­யும் ஒப்புக்­கொள்­கின்­ற­னர்.

2 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் நிறைந்து நிற்­கும் மக்­க­ளின் எண்­ணிக்­கையை விட, 18 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் நிறைந்து நிற்­கும் மக்­க­ளின் எண்­ணிக்கை அதி­கம் என்­பதைச் சாதா­ரண மக்­கள்­கூ­டப் புரிந்­து­கொள்­வர்.

ஆனால்,இந்த எண்­ணிக்­கையை அடிப்­ப­டை­யாக வைத்து ஒரு கட்­சி­யின் அர­சி­யல் பலத்தை மதிப்­பிட முடி­யுமா என்று நாம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும்.நிச்­ச­ ய­மாக அவ்விதம் மதிப்பிட முடியாது.ஒரு கட்­சி­யின் ஆத­ ர­வா­ளர்­கள் அனை­வ­ரும் அந்­தக் கட்­சி­யின் கூட்­டத்­தில் கலந்­து­கொள்­வ­தில்லை என்ற யதார்த்­தத்தை அடிப்­ப­டை­யாக வைத்தே இந்த விட­யத்தை நாம் ஆய்வு செய்ய வேண்­டும்.

உதா­ர­ணத்­துக்கு, ஒரு கட்­சிக்கு ஒரு தொகு­தி­யில் 50 ஆயி­ரம் ஆத­ரவு வாக்­கு­கள் உள்­ளன என்று வைத்­துக்­கொள்­வோம்.அந்­தத் தொகு­தி­யில் அந்­தக் கட்சி கூட்­டம் ஒன்றை நடத்­தி­னால் ஆயி­ரம்,இரண்­டா­யி­ரம் பேர் மாத்­தி­ரமே கலந்­து­கொள்­வர்.வாக்­க­ளிக்­கும் அத்­தனை பேரும் கலந்­து­கொள்­வ­தில்லை.

அதே­போல்­தான், இந்த மே தினக் கூட்­டங்­க­ளுக்­குச் செல்­கின்ற மக்­க­ளின் எண்­ணிக்­கை­யும்.ஒவ்­வோர் ஊரி­லும் அர­சி­யல்­வா­தி­கள் அதிக பணத்­தைச் செலவு செய்து மிக­வும் சிர­மப்­பட்டே மக்­களை இவ்­வா­றான கூட்­டங்­க­ளுக்கு அழைத்­துச் செல்­கின்­ற­னர்.

ஒவ்­வோர் ஊரி­லும் இருந்து சராசரி நான்­கைந்து பஸ்­கள் மக்­க­ளைக் கூட்­டத்­துக்கு ஏற்­றிச் செல்­லும்.சில திற­மை­யான அர­சி­யல்­வா­தி­கள் இந்த எண்­ணிக்­கையை அதி­க­ரித்­துக்­கொள்­கின்­ற­னர்.அவ்­வாறு அதி­க­ரிக்­கப்­பட்­ட­து­தான் மகிந்த அணி­யின் கூட்­டத்­துக்கு வந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை.

மே தினக் கூட்­டத்தை சிறப்­பாக ஒழுங்­க­மைத்த மகிந்த தரப்­பி­னர்
மகிந்த தரப்பில் பசில் ராஜ­பக்­ச­வும், மகிந்­தா­னந்த அழுத்­க­ம­கே­யும் இந்­தப் பணி­யைப் பொறுப்­பேற்­ற­னர்.பசில் மிகச் சிறந்த ஏற்­பாட்­டா­ளர் என்று பெய­ரெ­டுத்­த­வர்.மகிந்­தா­னந்­த­வும் அவ­ருக்­குச் சற்­றும் சளைத்­த­வர் அல்ல.மிக­வும் திற­மை­யான,-சுறு­சு­றுப்­பான அர­சி­யல்­வாதி.அது போக மகிந்த அணி­யில் உள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இள­மை­யா­ன­வர்­க­ளா­க­வும், திற­மை­யா­ன­ வர்­க­ளா­க­வும் உள்­ள­னர்.

தவற விடாதீர்கள்:  குறிக்கோளில் முற்றுமுழுதாக தோல்வி கண்டுவரும் கூட்டு அரசு

இந்த மே தினத்தை அவர்­கள் மைத்­திரி அணிக்கு எதி­ரான சவா­லாக ஏற்­றி­ருந்­த­தால், அதி­க­மான மக்­க­ளைக் கொண்டு செல்ல வேண்­டிய நிர்ப்­பந்­தம் அவர்­க­ளுக்கு ஏற்பட்டிருந்தது. அது போக இந்த மே தினக் கூட்­டம் தொழி­லா­ளர்­க­ளுக்கு எதைக் கொடுக்­கப் போகின்­றது என்று
இந்த நாட்டு மக்­கள் எதிர்­பார்க்­க­வில்லை.

மகிந்­த­வின் கூட்­டத்­திலா அல்­லது மைத்­தி­ரி­யின் கூட்­டத்­திலா அதிகமான மக்கள் கலந்து கொள்வர் என்றே மக்­கள் தெரிந்து கொள்ள விரும்பி னர். எந்த அணிக்­குக் கூட்­டம் அதி­கம் செல்­கி­றதோ அந்த அணியே மக்­கள் செல்­வாக்­குள்ள அணி என்று மக்­கள் ஏற்­க­னவே தீர்­மா­னித்து விட்­ட­தால் தான், இந்­தப் போட்டி- நிலைமை ஏற்­பட்­டது. அப்­ப­டிப் பார்த்­தால் மகிந்­த­வின் கூட்­டத்­தில் கலந்­து­கொண்ட சனத்­தி­ரள் ஒரு மாயை­யா­கும்.ஆனால், மைத்­தி­ரி­கூட இந்த மாயையை உண்மை என்று நம்பி இருப்­ப­து­தான் வேடிக்கை.

மகிந்த அர­சை எவராலும் இலகுவில் கவிழ்க்க முடி­யாது என்று நீண்ட கால­மாக இருந்து வந்த மாயை, 2015 ஜனா­தி­ப­தித் தேர்­த­லில் எவ்­வாறு பொய்­யா­கிப் போனதோ, அதே­போல் பொய்­யா­கிப் போகக்­கூ­டி­ய­து­தான் மகிந்­த­வின் மே தினக் கூட்­டம் குறித்த மாயையும்.

அது­மாத்­தி­ர­மன்றி,மகிந்த ஆட்­சி­யில் மகிந்தவின் கூட்­டங்­க­ளுக்கு மக்­கள் நாடெங்­கி­லும் இருந்து பஸ்­க­ளில் அழைத்­துச் செல்­லப்­ப­டு­வது வழக்­கம்.
வெளி ஊர்­க­ளில் இருந்து மக்­க­ளைக் கொண்டு வந்து நிரப்பி பெரும் சனத் திர­ளைக் காட்டி மக்­க­ளின் மனங்­களை மாற்­று­வது மகிந்­த­வின் பாணி­யா­கும். இம்­முறை அவ­ரது மே தினக் கூட்­டத்­தி­லும் இதுதான் நடந்­தது.

இந்த உண்­மையை அர­சுத் தலை­வர் விளங்­கிக்­கொள்ள வேண்­டும்.
மகிந்­த­வின் கூட்­டத்துக்கு வந்த அந்­தப் போலி ­யான கூட்­டத்­தைப் பார்த்து-, உள்­ளூ­ராட்சிச் சபைத் தேர்­தலை மேலும் ஒத்­திப் போடு­வது இனி­யும் உகந்­த­தல்ல.

தொடர்ந்து காலம் தாழ்த்­தத் தாழ்த்த, மைத்­திரி தரப்­புக்கு இருக்­கின்ற மக்­கள் செல்­வாக்கு, மகிந்த பக்­கம் சாய்­வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும் என்­பதை மைத்திரி உணர்ந்து செயற்­பட வேண்­டும்.

You might also like