புதிய அரசமைப்பு தாமதம் மோடியிடம் முறையீடு

புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் ஏற் பட்டுவரும் காலதாமதம் குறித்து இந்தி யத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் முறையிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

வெசாக் பண்­டி­கைக் கொண்­டாட்­டத்­தில் கலந்­து­கொள்­வ­தற்­கா­கக் கொழும்பு வந்­தி­ருந்த மோடி நாடு திரும்­பும்­போது கட்­டு­நா­யக்க வா­னூர்தி நிலை­யத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரைச் சந்­தித்­துச் சுமார் அரை மணி நேரம் பேசி­னார்.

கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தலை­மை­யில் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை சேனாதிராசா, த.சித்­தார்த்­தன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்­தி­ரன், ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சித் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்தி­ரன் ஆகி­யோர் கலந்­து­கொண்­ட­னர். மோடி­யின் அருகே சம்­பந்­தர் அமர்ந்­து­கொண்­டார். ஆங்­கி­லத்­தில் தனது கருத்­துக்­களை எடுத்­துச் சொன்­னார்.

பல்­வேறு விட­யங்­கள் பற்­றி­யும் கூட்­ட­மைப் புத் தலை­வர் விரி­வாக விளக்­கி­னார். அதில் முக்­கி­ய­மாக புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் குறித்த விட­யம் பேசப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்புப் பற்றி வலியுறுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ளதைப் போன்று காணி, பொலிஸ் அதிகாரங்களை உள்ளடக்கிய பொருள் பொதிந்த அதிகாரப் பகிர்வைத்தான் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதும் எடுத்துக் கூறப்பட்டது.

அரசமைப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள கால தாமதம், அதற்கான காரணங்கள் குறித்தும் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. புதிய அரசமைப்பு முயற்சி எதிர்பார்க்கப்பட்டதைவிடத் தாமதமடைவது குறித்த தனது கவலையைக் கூட்டமைப்பு விரிவாக விளக்கியது.

‘‘அரசமைப்பு விவகாரம் கடந்த ஆண்டே முடிவடைந்திருக்கவேண்டும். கடந்த பல விடயங்களும் பேசி ஓர் இணக்கப்பாட்டு நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் நீண்ட தடங்கல் ஏற்பட்டு வருகின்றது. இந்தியா இந்த விடயத்தில் தனது ஈடுபாட்டைக் காட்டவேண்டும்’’ என்று சம்பந்தர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் அரசின் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. தமிழ் மக்களுக்கு இதனால் இந்த அரசு மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளமையும் தெளிவுபடுத்தப்பட்டது.

‘‘வடக்கு – கிழக்கில் இளையோர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்குவதற்காக, வடக்கு – கிழக்கு பிராந்தியத்தில் இந்தியா பெரிய முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றும் சம்பந்தர் கோரிக்கை விடுத்தார்.

You might also like