முள்ளிவாய்க்காலில் இன்னும் இறுதிப்போர் அடையாளங்கள்

இறு­திப்போர் நடை­பெற்ற முள்­ளி­வாய்க்கால் பகு­தி­யில் வெடிக்­காத துப் பாக்கி ரவை­கள் உக்­கிய நிலை­யில் இப் போ­தும் காணப்­ப­டு­கின்­றன.

முள்­ளி­ய­வாய்க்­கால் கிழக்­குப் பகு­தி­யில் மண்­ணில் புதை­யுண்ட நிலை­யில் விடு­த­லைப் புலி­க­ளால் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் துப்­பாக்கி ரவை­கள் பல வெடிக்­காத நிலை­யில் உக்­கிக் காணப்­ப­டு­கின்­றன என்று கூறப்­பட்­டது.

போர் முடி­வ­டைந்து 8 வரு­டங்­கள் கடந்த நிலை­யி­லும் போரின் அடையாளங்களையும்,வடுக்களையும் அங்கு ஒரு சில இடங்களில் பரவலாகக் காணமுடிவதாக அங்கு சென்றவர்கள் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி ரவைகள் அகற்றப்படாத நிலையில் இப்போதும் காணப்படுகின்றன என்று கூறப்பட்டது.

You might also like