இடைக்­கால அறிக்கை செப்­ரெம்­பர் இறு­தி­யில் நாடா­ளு­மன்­றம் வரு­கி­றது

பல தரப்­புக்­க­ளா­லும் எதிர்­பார்க்­கப்­படும், புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை இந்த மாதத்­தின் மூன்­றா­வது வாரத்­தில் அர­சி­யல் நிர்­ணய சபைக்கு (நாடா­ளு­மன்­றுக்கு) சமர்ப்பிக்­கப்­ப­ட­வுள்­ளது. வழி­ந­டத்­தல் குழு­வின் இன்­றைய கூட்­டத்­தில் இதற்­கான திகதி தீர்­மா­னிக்­கப் படும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

வழி­ந­டத்­தல் குழு­வின் கூட்­டம் இன்­றும், நாளை­யும் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தக் கூட்­டத்­தில் இறுதி செய்­யப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்­கை­யின் வரைவு அத­னோடு இணைந்த பின்­னி­ணைப்­புச் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. நாடா­ளு­மன்­றத்­துக்கு என்ன வடி­வில் இடைக்­கால அறிக்கை வரைவு சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளதோ அந்த வடி­வில் வழி­ந­டத்­தல் குழு­வின் இன்­றைய அமர்­வில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளது. அதனை சகல தரப்­பி­ன­ரும் ஏற்­றுக் கொண்ட பின்­னர், அர­சி­யல் நிர்­ணய சபைக்­குச் சமர்­பிப்­ப­தற்­கான திகதி தொடர்­பில் தீர்­மா­னிக்­கப்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கடந்த ஆண்டு டிசெம்­பர் மாதமே, வழி­ந­டத்­தல் குழு­வின் இடைக்­கால அறிக்கை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. இருப்­பி­னும் கட்­சி­க­ளின் இணக்­கப்­பாடு இன்­மை­யால், குறிப்­பாக சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் குழப்­பத்­தால் இந்த நட­வ­டிக்­கை­யில் பெரும் தாம­தம் ஏற்­பட்­டி­ருந்­தது.

இடைக்­கால அறிக்­கைக்­குப் பின்­னி­ணைப்­பாக தமது கட்­சி­க­ளின் நிலைப்­பாட்டை வழங்­கு­வ­தற்கு கூட சுதந்­தி­ரக் கட்சி பின்­ன­டித்து வந்­தது. இந்த நிலை­யில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, மகிந்த அணி உள்­ளிட்ட சகல தரப்­பு­க­ளும் தமது பின்­னி­ணைப்­புக்­களை கடந்த மாத இறு­தி­யில் வழங்­கி­யி­ருந்­த­னர்.

இந்­தப் பின்­னி­ணைப்­புக்­களை இடைக்­கால அறிக்­கை­யு­டன் எப்­படி இணைப்­பது? என்­பது தொடர்­பில் நேற்று முன்­தி­னம் முக்­கிய கலந்­து­ரை­யா­டல் நடை­பெற்­றது. இந்­தக் கலந்­து­ரை­யா­ட­லில் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்­பிக்க வேண்­டிய வடி­வில், இடைக்­கால அறிக்கை அத­னு­டன் பின்­னி­ணைப்­புக்­கள் என்­ப­ன­வும் சேர்க்­கப்­பட்டு இறுதி செய்­யப்­பட்­டுள்­ளன. இறுதி செய்­யப்­பட்ட வடி­வமே இன்­றைய வழி­ந­டத்­தல் குழுக் கூட்­டத்­தில் சமர்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

You might also like