யாழ். மாவட்ட ‘பி’ அணி மிகச் சிறப்பான வெற்றி

இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­தும் 15 வய­துக்­குட்­பட்ட அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­ட­மொன்­றில் யாழ்ப்­பாண மாவட்ட ‘பி’ அணி அபார வெற்­றி­பெற்­றது.

கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன் தினம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளின் இணைந்த அணியை எதிர்த்து யாழ்ப்­பாண மாவட்ட ‘பி’ அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பாண மாவட்ட ‘பி’ அணி 48.1 பந்­துப் பரி­மாற்­றங்­கள் நிறை­வில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 209 ஓட்­டங் களைப் பெற்­றது.

அதி­க­பட்­ச­மாக பிரி­யந்­தன் 35 ஓட்­டங் களை­யும், ஹரி­சன் 30 ஓட்­டங்­க­ளை­யும், றொக்­சன் 21 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் காண்­டீ­பன் 4 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

210 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளின் இணைந்த அணி 20.1 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 70 ஓட்­டங் களுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. இத­னால் 139 ஓட்­டங்களால் அபார வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பாண மாவட்ட‘பி’ அணி.

You might also like